ராம்குமார் ராமநாதன்
இந்திய டென்னிஸ் வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்குமார் ராமநாதன் (Ramkumar Ramanathan) 1994 நவம்பர் 8இல் பிறந்த ஒரு தொழில்முறை இந்திய டென்னிசு வீரர் ஆவார்.[2] ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் சோம்தேவ் தேவ்வர்மனுடன் இறுதிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ஆவார். அவர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி உலகத் தர வரிசையில் 111 வது இடத்தில் இருந்தார். அவர் டேவிஸ் கோப்பையில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
Remove ads
தனிப்பட்ட மற்றும் ஆரம்ப வாழ்க்கை
ஐந்தாவது வயதில் டென்னிசு விளையாடுவதை ராமநாதன் துவங்கினார். இவரது தந்தை ராமநாதன் இவ்விளையாட்டிற்கு இவரை அறிமுகப்படுத்தினார். அவரது தாயின் பெயர் அழகம்மை மற்றும் சகோதரியின் பெயர் உமா என்பதாகும். அவரது பெற்றோர் இருவரும் துணி வியாபாரத்தில் உள்ளனர். அவர் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் தமிழ் பேசுகிறார். அவர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் சான்செஸ்-காசல் அகாடமியில் பயிற்சி பெற்றார்.[3] இலயோலாக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[4]
Remove ads
தொழில்
2014-2016: ஆரம்பகால வாழ்க்கை
சென்னை ஓபன் டென்னிசு தொடரின் முதல் சுற்றில் முதல் தர இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மனை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[5][6][7] பின்னர், அவர் இரண்டாவது சுற்றில் மார்செல் கிரானோலஸிடம் தோற்றார்.
2015 ஆம் ஆண்டில், ராமநாதனின் விளையாட்டு பெரும்பாலும் கடினமாகவே இருந்தது. ஏப்ரல் மாதம், அவர் சென்னை ஓபன் போட்டிகளில் டட்சுமா இடோ உடன் நேர் செட்களில் தோல்வியுற்றார்.[3] சவால் நிறைந்த துருக்கியின் மெர்சின் கோப்பை போட்டியில் தனது முதல் இரட்டையர் இறுதிப் போட்டியை அடைந்தார். ரிக்கார்டோ கெடின் உடன் இணைந்து, விளையாடிய இந்த இணை இறுதிப் போட்டியில் மேட் பவிக் மற்றும் மைக்கேல் வீனஸ் ஆகியோரிடம் தோற்றது.[8] கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் தொடரில் தனது இரண்டாவது ஏடிபி உலக சுற்றுப்பயணத்தில், அங்கு அவர் முதல் சுற்றில் மிக்கேல் குகுஷ்கினை வீழ்த்தினார்.[3]
2017: சாதனை மற்றும் வெற்றிகள்
ஏப்ரல் மாதத்தில், ராமநாதன் தனது முதல் ஒற்றையர் போட்டியின் இறுதிப் போட்டியில் தாலஹாசியை சந்தித்தார். ஸ்லோவேனியாவின் பிளேஸ் ரோலாவிடம் இறுதிப் போட்டியில் ரன்னர்-அப் ஆக முடித்தார்.[9]
2018: முதல் ஏடிபி உலக சுற்றுப்பயண இறுதிப்போட்டி
2018இல் மகாராஷ்டிரா ஓபனில் வைல்டு கார்டு மூலம் நுழைந்தார். அதில் இரண்டாவது சுற்றுகளில் மாரின் கிளிக் என்பவரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார்.[10] பின்னர் அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தகுதிபெற்றார், அங்கு அவர் வாசெக் போஸ்பிசில் என்பவரிடம் இறுதிப் போட்டியில் தோற்றார்.[11]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads