2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2016 South Asian Games, officially the XII South Asian Games) என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் நகரங்களில் நடைபெறுகின்றன.[1] 228 போட்டிகள் மற்றும் 23இற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. மொத்தமாக 2,672 போட்டியாளார்கள் இந்தப் போட்டிகளிலும், விளையாட்டுக்களிலும் பங்குபற்றுகின்றனர்.[2] இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை 5 பெப்ரவரி 2016 அன்று குவகாத்தியில் தொடக்கிவைத்தார்.[3][4]
Remove ads
பங்குபற்றும் நாடுகள்
8 நாடுகள் இப்போட்டியில் போட்டியிடுகின்றன. அவை பின்வருமாறு:[2]
அடைப்புக் குறிக்குள் இருக்கும் இலக்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர் என்பதை குறிக்கிறது.
ஆப்கானிஸ்தான் (254)
வங்காளதேசம் (409)
பூட்டான் (87)
இந்தியா (519)
மாலைத்தீவுகள் (184)
நேபாளம் (398)
பாக்கித்தான் (337)
இலங்கை (484)
பதக்க நிலை
- 2016 பெப்ரவரி 16 நிலவரப்படி.[5]
போட்டிகளை நடத்தும் நாடு
நாட்காட்டி
5 பெப்ரவரி 2016இல் குறிக்கப்பட்ட 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் துல்லியமான கணிப்பீடு.[2][6]
OC | தொடக்க விழா | ● | போட்டி நிகழ்வு | 1 | போட்டி இறுதி | CC | முடிவு விழா |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads