ராம்குமார் (இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமாவார்.
தொழில்
திருப்பூரைச் சேர்ந்தவர் ராம்குமார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், பலரின் கவனம் பெற்றது. அதுதான் பின்னர் விஷ்ணு விஷால், நந்திதா, ராமதாஸ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த வெற்றிப்படமான முண்டாசுப்பட்டி (2014) படத்தின் இயக்குநராக அறிமுகமாக வழிவகுத்தது. இவர், யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாதவர்.[1]
அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, அமலாபால், ராமதாஸ், சரவணன் ஆகியோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்த ராட்சசன் (2018) படத்தை இரண்டாவதாக இயக்கினார். இப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியானது.[2]
அடுத்து தனுஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.[3][4]
Remove ads
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads