ரா. ராஜேந்திரன்

From Wikipedia, the free encyclopedia

ரா. ராஜேந்திரன்
Remove ads

ரா. ராஜேந்திரன் (R. Rajendran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவ்ர் அவர் சேலம் வடக்கு தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3]மேலும் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.[4] இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

விரைவான உண்மைகள் ரா. ராஜேந்திரன் ...
விரைவான உண்மைகள் சுயவிவரம், தமிழ்நாடு அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ...
Remove ads

இளமை வாழ்க்கை

ரா. ராஜேந்திரன் 3 ஜூன் 1959இல் தமிழ்நாட்டில் பிறந்தார்.[5] இவர் வேளாண்மையைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் அரசுப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும், சேலம், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடித்தார். கல்லூரி நாட்களில் அரசியலில் நுழைந்து 1990களின் முற்பகுதியில் இருந்து இன்றுவரை தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அரசியல்

1985 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி அவர்களால் மாணவர் பிரிவு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு தற்போதைய திமுகவின் இளைஞர் அணியின் செயலாளராக இருந்த மு. க. ஸ்டாலின் அவர்களால் திமுகவின் இளைஞர் பிரிவில் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு மு. க. ஸ்டாலினால் மாநில இளைஞர் பிரிவு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு அரசு தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக செயல்பட்டார்.

2006 ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)யின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் இறந்த பிறகு, கட்சியின் தலைவரால் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)யின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][2] 2021 ஆம் ஆண்டில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு] இரண்டாவது முறையாக சட்டப்பேர்வை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][7][3][8][9]

Remove ads

அமைச்சரவை

29.09.2024 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன்மூலம் சேலம் மாவட்டத்திற்கான திமுகவின் இரண்டாவது அமைச்சராக உள்ளார்.[10][11][12]

சட்டமன்ற உறுப்பினராக

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads