ரெட்டியார்

ஒரு சாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரெட்டியார் (Reddiar) எனப்படுவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வன்னியர்களும் ரெட்டியார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகின்றனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

ரெட்டியார்கள், ஆந்திர பிரதேசத்தில் இருந்து சாகுபடிக்கு வளமான மண்ணைத் தேடி, விசயநகர பேரரசின் போது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் குடியேறினர்.

Remove ads

தோற்றம்

ரெட்டி வம்சத்தைச் சேர்ந்த அனவோட ரெட்டி (கி.பி. 1335-1364) வடக்கே ராஜமுந்திரி, தெற்கே காஞ்சி மற்றும் மேற்கே ஸ்ரீசைலம் வரை தன் இராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார். வள்ளியூரில் நடந்த போரில், ரெட்டியபுரம் படை 14 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் படையை தோற்கடித்தது. வள்ளியூர் முருகன் கோயிலின் நுழைவாயிலில் உள்ள ஒரு தகவல் பலகையில், 14 ஆம் நூற்றாண்டு வள்ளியூர் போர் - ரெட்டியபுரம் படை வள்ளியூர் போரில் திருவிதாங்கூர் படையை தோற்கடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போருக்குப் பிறகு ரெட்டியார்கள் 14 ஆம் நூற்றாண்டில் சமுகரங்கபுரம், சீலாத்திகுளம் மற்றும் திருநெல்வேலி பகுதி முழுவதும் குடியேறினர்.

Remove ads

பிரிவுகளும் கோத்திரங்களும்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் சாதியினரிடம் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன. அதுகுறித்த அட்டவணை இது. [4]

மேலதிகத் தகவல்கள் வ.எண்., பிரிவு ...
Remove ads

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads