கே. என். நேரு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. என். நேரு (K. N. Nehru, பிறப்பு: நவம்பர் 9, 1952) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர், திமுகவின் தலைமைக் கழக முதன்மை செயலாளராக உள்ளார்.[1]
மு. கருணாநிதி மிகவும் நம்பிக்கை வைத்திருந்த அமைச்சராக கே.என்.நேரு இருந்தார்.[2] கே. என் .நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.[3] 2008 முதல் 2009 வரை இடைப்பட்ட காலத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார்.[4][5] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலுக்கு பின் அமைந்த திமுக அமைச்சரவையில், 2021 மே 7 அன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சராகப் பதவியேற்றார்.[6]
நெய்குளம் கிராமத்தில் 9 நவம்பர் 1952 ஆம் ஆண்டு பிறந்தார்.[7] ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக இருந்துள்ளார்.[8] சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினர் கே. என். நேரு.[9] இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.[10]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads