வெ. வைத்தியலிங்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெ. வைத்தியலிங்கம் (பிறப்பு: அக்டோபர் 5, 1950), இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் அரசியல்வாதியும் முன்னாள் முதல் அமைச்சரும் ஆவார். முதன்முறையாக 1991 முதல் 1996 வரையும் பின்னர் இரண்டாம் முறையாக 2008 -2011 காலகட்டத்திலும் முதலமைச்சராகப் பணியாற்றினார். எட்டுமுறை சட்டப்பேரவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த பேரவை உறுப்பினராக விளங்குகிறார்.[1]
இவர் புதுவையின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனாவார். வைத்திலிங்கம் குடும்பம் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரர்களாக பணியாற்றியதற்காக அறியப்படுகிறது.[2]
Remove ads
இளமை வாழ்வு
பாண்டிச்சேரியில் பிறந்து மதுக்கரை, புதுச்சேரியில் வளர்ந்த வைத்தியலிங்கம், சென்னை இலயோலாக் கல்லூரியில் பயின்று பின்னர் தமது குடும்ப விவசாயத்திற்கு திரும்பினார். 1969 ஆம் ஆண்டு புதுவை மருத்துவ சேவை இயக்குநராக இருந்த டா.சாம்பசிவத்தின் மகள் சசிகலாவை மணம் புரிந்தார். புதுவை மாநில நில வளர்ச்சி வங்கியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads