லாக்கீட் சி-130 எர்க்குலிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாக்கீட் சி-130 எர்க்குலிசு (Lockheed C-130 Hercules) என்பது ஓர் அமெரிக்க 4-இயந்திர சுழலிவிசை இராணுவப் போக்குவரத்து வானூர்தி ஆகும். இது லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டது. புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஆயத்தமில்லாத ஓடுபாதைகளைப் பயன்படுத்தும் திறன் கொண்டது. சி-130 தொடக்கத்தில் இராணுவ, மருத்துவத் தேவைகள், மற்றும் சரக்குப் போக்குவரத்து விமானமாக வடிவமைக்கப்பட்டது. பல்துறை விமானச் சட்டகம் வான்வழித் தாக்குதல், தேடுதல் மற்றும் மீட்பு, அறிவியல் ஆய்வுப் பணி, வானிலை உளவு, வான்வழி எரிபொருள் நிரப்புதல், கடல் ரோந்துப் பணி, வான்வழித் தீயணைப்பு உட்படப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது உலகெங்கிலும் உள்ள பல இராணுவப் படைகளுக்கு முக்கிய தந்திரோபாய வானூர்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. லாக்கீட் எல்-100 என விற்பனை செய்யப்படும் மக்கள் பயன்பாட்டுப் பதிப்புகள் உட்பட எர்க்குலிசின் 40-இற்கும் மேற்பட்ட வகைகள் 60-இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகின்றன.
சி-130 வானூர்தி 1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தனது சேவையைத் தொடங்கியது, பின்னர் ஆத்திரேலியா உட்படப் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. எர்க்குலிசு பல இராணுவ, பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளது. 2007 இல், சி-130 அதன் முதன்மை வாடிக்கையாளருடன் (ஐக்கிய அமெரிக்க வான்படை) 50 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றிய ஐந்தாவது வானூர்தி[கு 1] ஆகும். சி-130 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தயாரிக்கப்பட்ட மிக நீண்ட இராணுவ விமானமாகும், புதுப்பிக்கப்பட்ட லாக்கீட் மார்ட்டின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் தற்போது தயாரிக்கப்படுகிறது.[2]
Remove ads
குறிப்புகள்
- மற்றையவை: இங்கிலீசு எலெக்ட்ரிக் கான்பரா, பி-52 இசுத்திராட்டோபோர்ட்டிரசு, துப்போலெவ்-95, கேசி-135.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads