லேக் காச்சின்ஸ்கி

From Wikipedia, the free encyclopedia

லேக் காச்சின்ஸ்கி
Remove ads

லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி (Lech Aleksander Kaczyński; 18 சூன் 1949 – 10 ஏப்ரல் 2010) போலந்து குடியரசின் அரசுத்தலைவராக 2005 முதல் 2010 ஆம் ஆண்டில் இறக்கும் வரை இருந்தவர். சட்டமும் நீதியும் என்ற கட்சியின் சார்பில் அரசியல்வாதியாக இருந்தவர். போலந்துத் தலைநகர் வார்சாவின் மேயராக 2002 முதல் 2005 வரை பணியாற்றியவர்.

விரைவான உண்மைகள் லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கிLech Aleksander Kaczyński, போலந்தின் அரசுத்தலைவர் ...

2010 ஏப்ரல் 10 இல் இவரும் இவரது மனைவியும் வேறு பல அரசு அதிகாரிகளும் இரசியாவின் சிமலியென்ஸ்க் வட்டாரத்தில் உள்ள இரசிய வான்படைத் தளமொன்றில் இவர்கள் பயணம் செய்த வானூர்தி தரையிறங்கும் போது இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டார்கள். வானூர்தியில் பயணம் செய்த அனைவரும் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். காட்டின் படுகொலைகளின் 70வது நினைவுகூரல் நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இவ்வானூர்தி விபத்துக்குள்ளாகியது[1][2].

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads