வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு

சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு From Wikipedia, the free encyclopedia

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு
Remove ads

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation; BIMSTEC), தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்நாடுகளின் கூட்டு மக்கள் தொகை 1.5 மில்லியன், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டாலராகும் (2018).[3] இந்நிறுவனத்தின் உறுப்பினா் நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும். இவைகள் அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்[4].

விரைவான உண்மைகள் Bengali:, Burmese: ...

14 முன்னுரிமைத் துறைகள் இனங்காணப்பட்டு, இவைகளில் தொடா்ந்து நடவடிக்கை எடுக்க பல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன[3][5]. இவைகளுள் வரியில்லா வா்த்தக உடன்பாடு செய்து கொள்ள பேச்சு வாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது (2018). இந்நாடுகளில் தலைமை வகிக்கும் பொறுப்பு அகர வரிசையில் சுற்றிவரும். இதன் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது.

Remove ads

பின்னணி

1997 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள் பாங்காக் நகரில் BIST - EC (வங்காள தேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து பொருளாதாரக் கூட்டுறவு) என்ற துணை மண்டல அமைப்பு உருவாக்கப்பட்டது.[6][7] 1997 டிசம்பா் 22 அன்று மியன்மாா் நாடும் இதன் முழு உறுப்பினரானது. இதனால் இவ்வமைப்பு BIMST - EC எனப் பெயர் மாற்றமடைந்தது. முதலில் நேப்பாளம் ஒரு பாா்வையாளராக இருந்தது. பின்னா் நேப்பாளமும் பூட்டானும் முழு உறுப்பினா்கள் ஆயினா்.

2004 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்நிறுவனத்திற்கு BIMSTEC அல்லது Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என்று பெயா் சூட்டப்பட்டது.[8]

Remove ads

நோக்கம்

வங்காள விரிகுடா கடற்கரையிலமைந்திருக்கும் நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை மேம்படுத்த 14 நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வணிகம், முதலீடு, தொழில் நுட்பம், சுற்றுலா, மனித வள மேம்பாடு, வேளாண்மை, மீன்வளம், போக்குவரத்து மற்றும் தொலை தொடா்பு, நெசவு, தோல் உள்ளிட்டவை தெரிந்த துறைகளுள் அடங்கும்.[8] மேலும் கல்வி தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது பயிற்சியளிப்பதிலும் கூட்டுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு சமூக, தொழில் நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றிற்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பது இதன் நோக்கம்.

Remove ads

நிரந்தர தலைமை செயலகம்

இதன் நிரந்தரத் தலைமைச் செயலகம் டாக்கா நகரில் 2014 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. இதனை அமைக்கும் செலவில் 33 விழுக்காட்டை இந்தியா ஏற்றுக் கொண்டது.[8]

தலைமை

வங்காள தேசம் துவங்கி, அகரவரிசையில், இதன் தலைமையை ஒவ்வொரு நாடும் சுற்றில் ஏற்கும்.[9]

உறுப்பு நாடுகள்

மேலதிகத் தகவல்கள் நாட்டின் பெயர், தலைமைப்பதவி ...
Remove ads

BIMSTEC முன்னுரிமைத்துறைகள்

14 துறைகள் முன்னுரிமைத்துரைகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது[3][5][12]

மேலதிகத் தகவல்கள் முன்னுரிமைத் துறைகள், தலைமை நாடு ...
Remove ads

BIMSTEC - வரியில்லா வா்த்தக மண்டல உடன்பாட்டின் வரம்பு

BIMSTEC வரியில்லா வா்த்தக மண்டலத்தின் உடன்பாடு உறுப்பினா் நாடுகளால் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுவிட்டது. உறுப்பு நாடுகளிடையே வா்த்தகத்தையும் முதலீட்டையும் தூண்டுவதும், வெளிநாடுகளிலிருந்து இவைகளை ஈா்ப்பதும் இவ்வமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும். உறுப்பு நாடுகளிடையே பேச்சு வாா்த்தை நடத்தி இவா்களிடையே வா்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு வா்த்தகப் பேச்சு வாா்த்தைக் குழு (Trade Negotiation Committee) தாய்லாந்தை நிரந்தரத் தலைமை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Remove ads

BIMSTEC - கரையோர கப்பல் போக்குவரத்து உடன்பாடு வரைவு

2017, 4 டிசம்பா் மாதம் புதுடெல்லியில் விவாதிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைலுக்குள் கப்பல் போக்குவரத்து செய்வது இதில் அடங்கும். இதனால் நாடுகளிடையே குறைந்த செலவில் பொருட்களை எடுத்துச் செல்ல இயலும்.

ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவி

ஆசியமேம்பாட்டு வங்கி இந்த அமைப்பின் போக்குவரத்து கட்டமைப்பின் வசதியைக் குறித்த ஆய்வினை மேற்கொள்ளௌதவி செய்தது. இந்த ஆய்வும் 2004 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது

உச்சி மாநாடுகள்

Thumb
மூன்றாவது உச்சி மாநாடு, நைபைடா மியான்மர்
மேலதிகத் தகவல்கள் எண்., தேதி ...

திட்டங்கள்

  • சாலை மற்றும் ரயில்போக்குவரத்து கிழக்கை இணைக்கும் திட்டங்கள்
  • கடற்கரைக் கப்பல் போக்குவரத்து
  • மின்சார வினியோக கட்டமைப்பு
  • மண்டல அளவில் பேரிடர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை ஏற்பாடு

Current leaders of BIMSTEC

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads