வடக்கு வெள்ளை காண்டாமிருகம்

From Wikipedia, the free encyclopedia

வடக்கு வெள்ளை காண்டாமிருகம்
Remove ads

Vertebrata

விரைவான உண்மைகள் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் Northern white rhinoceros, காப்பு நிலை ...

வடக்கு வெள்ளை காண்டாமிருகம் (northern white rhinoceros, northern square-lipped rhinoceros, Ceratotherium simum cottoni), என்பது வெள்ளை காண்டாமிருகத்தின் இரண்டு துணையினங்களில் ஒன்றாகும் (வேறொன்று தெற்கு வெள்ளை காண்டாமிருகம் ஆகும்). முன்பு இந்த விலங்கினம் சகாராவின் தெற்குப் பகுதியில் தெற்கு மற்றும் நடு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் காணப்பட்டது. 2018 மார்ச் 19 ஆம் தேதி நிலவரத்தின்படி, இந்த கிளையினத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்ட இரண்டு காண்டாமிருகங்கள் மட்டுமே உயிரோடு உள்ளன. இவை இரண்டுமே பெண் மிருகங்களாகும்; ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களில் இருந்து அறியப்படாத அல்லது தவறாக வகைப்படுத்தப்பட்ட ஆண் வெள்ளை காண்டா மிருகங்கள் இருந்தால் அதைத் தவிர்த்து, இந்த இனத்தில் ஆண் காண்டா மிருகம் என்பதே இல்லை. இந்த இரண்டு பெண் காண்டாமிருகங்கள் செக் குடியரசின் த்வர் க்ராலோவ் விலங்கு காட்சி சாலையைச் சேர்ந்தவை. ஆனால் இவை கென்யாவின் ஓல் பெஜெடா காப்பிடத்தில் ஆயுதம் தரித்த காவலாளிகளால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

2011 இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த விலங்கினத்தை "கடுமையான ஆபத்துக்குள்ளனதாக (ஒருவேளை காட்டினுள் அழிந்துவிட்டிருக்கக்கூடிய)" அறிவித்தது.[2]

1960 இல் இந்த இன காண்டாமிருகங்கள் 2,000 இருந்தன. ஆனால் கள்ள வேட்டை, வாழிட அழிப்பு, காடு ஆக்கிரமிப்பு போன்றவற்றின் காரணமாக 2008 ஆண்டுக்குப் பிறகு ஒரு வடக்கு வெள்ளை காண்டாமிருகம்கூடக் காட்டில் இல்லாமல் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது. கென்யாவில் உள்ள ஓல் பெஜெடா காப்பிடத்தில், சூடான் என்ற பெயருடைய ஒரு ஆண் காண்டாமிருகமும் அதன் மகளான நஜின், பேத்தியான ஃபதுவும் என்னும் இரு பெண் காண்டாமிருகங்கள் வாழ்ந்துவந்தன. இந்நிலையில் 2018 மார்ச் 20 அன்று வடக்கு வெள்ளை காண்டாமிருக வகையின் கடைசி ஆண் காண்டாமிருகமான சூடான் இறந்தது. இதையடுத்து இன்னும் இரண்டு வடக்கு வெள்ளை பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் எஞ்சியிருக்கின்றன.

இந்த காண்டாமிருக வகை முற்றிலும் அற்றுப்போவதற்கு முன்னதாகச் செயற்கைக் கருவூட்டுதல் முறை வழியாக இந்த இனத்தைக் காப்பாற்ற ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துவருகிறார்கள். நஜினும் ஃபதுவையும் செயற்கையாகக் கருத்தரிக்க வைக்க முடியவில்லை. அதனால் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பை மேற்கொண்டு, வாடகைத் தாய் முறைபோல தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களின் கருப்பையில் கருவைச் செலுத்தி குட்டிகளை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads