வட மத்திய மண்டல கலாச்சார மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வட மத்திய மண்டல கலாச்சார மையம் (North-Central Zone Cultural Centre) என்பது இந்தியாவின் ஏழு மண்டல கலாச்சார மையங்களில் ஒன்று ஆகும்
வரலாறு
வட மத்திய மண்டல கலாச்சார மையம என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில்[1] அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஏழு மண்டல கலாச்சார மையங்களில் ஒன்று. 1986-ல் இம்மையம் நிறுவப்பட்டது. இது உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா, உத்தாரகண்டம், மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் நாட்டுப்புற, பழங்குடியினர், நுண்கலைகள் மற்றும் கைவினைகளின் வளமான மரபுகளைக் கொண்டுள்ளது. இந்த மரபுகளைச் செழுமைப்படுத்தவும், மேம்படுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் இந்த மையம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த மையம் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்த மையத்தின் தலைவராக உத்தரப்பிரதேச ஆளுஞர் உள்ளார்.[2]
Remove ads
நோக்கம் மற்றும் குறிக்கோள்
- சங்கீதம், நாடகம், லலித் கலா போன்ற பரந்த துறைகளின் கீழ் வரும் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, உத்ராஞ்சல் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மண்டலத்தின் கலைகளின் முன்னோக்கு மற்றும் பரவலைப் பாதுகாத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.
- மண்டலத்தின் பல்வேறு கலைகளின் செழுமையான பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தை மேம்படுத்தவும், கலாச்சார பாரம்பரியம் பற்றிய மக்களின் நனவை மேம்படுத்தவும் மற்றும் வளப்படுத்தவும்.
- பல்வேறு கலைகளுக்கிடையேயான இணைப்புகள் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பெரிய கூட்டு அடையாளத்திற்கு அவற்றின் பங்களிப்பில் சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பது.
- நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வது.
- அழிந்து வரும் கலை வடிவங்களைப் பாதுகாத்தல் மற்றும் வலுப்படுத்த சிறப்புத் திட்டங்களை உருவாக்குதல்.
- கருத்தரங்குகள், கருத்துப் பரிமாற்றம் மற்றும் பட்டறைகள் மூலம் நாட்டின் பிற பகுதி இளைஞர்களை ஆக்கப்பூர்வமான கலாச்சாரத் தொடர்புகளில் ஊக்குவித்தல் மற்றும் ஈடுபடுத்தும் திட்டங்களை உருவாக்குதல்
- கலைவடிவ வெளியீடு மற்றும் ஆவணப்படுத்தும் பணி.
Remove ads
இந்தியாவின் பிற பிராந்திய கலாச்சார மையங்கள்
- கிழக்கு மண்டல கலாச்சார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- வடகிழக்கு மண்டல கலாச்சார மையம், திமாபூர், நாகாலாந்து
- மேற்கு மண்டல கலாச்சார மையம், உதய்பூர், ராஜஸ்தான்
- தென்னக பண்பாட்டு தஞ்சாவூர், தமிழ்நாடு
- தென்-மத்திய மண்டல கலாச்சார மையம் நாக்பூர் மத்தியப்பிரதேசம்
- வடக்கு மண்டல பண்பாட்டு மையம் மையம், பாட்டியாலா, பஞ்சாப்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads