கிழக்கு மண்டல கலாச்சார மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு மண்டல கலாச்சார மையம் (East Zone Cultural Centre) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தாவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கலாச்சார மையமாகும். கொல்கத்தா இந்தியாவின் கலாச்சார தலைநகரம் ஆகும்.[1] மேலும் பொதுவாக மகிழ்ச்சியான நகரம் எனக் கொல்கத்தா அறியப்படுகிறது. இந்தியாவில் நிறுவப்பட்ட ஏழு கலாச்சார மண்டலங்களில் கிழக்கு மண்டல கலாச்சார மையமும் ஒன்று. கிழக்கு கலாச்சார மண்டலத்தின் கீழ் உள்ள இந்திய மாநிலங்கள்: மேற்கு வங்காளம், சார்க்கண்டு, பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகும்.[2] இந்த மண்டலம் மூன்று பாரம்பரிய நடனங்களான, ஒடிசி, சத்ரியா மற்றும் மணிப்புரி நடனங்களுக்குத் தாயகமாக உள்ளது. பாரம்பரிய இசையாக ஒடிசி இசை மற்றும் ரவீந்திர சங்கீதம் ஆகியன உள்ளன. ஒடியா மொழி இந்தியாவில் உள்ள செம்மொழிகளில் ஒன்றாகும். கிழக்கு இந்தியாவில் பேசப்படும் ஒரே ஒரு பாரம்பரிய மொழியும் இதுவாகும்.



Remove ads
வரலாறு
கிழக்கு மண்டல கலாச்சார மையம், 1985ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளின் பல இன கலாச்சார மையங்கள் மற்றும் சிறப்பான குழுக்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கிறது. இம்மையத்தின் நோக்கம் இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தின் கிழக்குப் பகுதியை முன்னிறுத்துவதும் பரப்புவதும் ஆகும்.
அமைப்பு
கிழக்கு மண்டல கலாச்சார மையம் உறுப்பினர்கள் 1. கலாச்சார விவகாரங்கள் துறை, அசாம் அரசு, 2. இயக்குநர், கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை. பீகார் அரசு, 3. இயக்குநர், கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை, சார்க்கண்டு, 4. ஆணையர் (கலை மற்றும் கலாச்சாரம்), மணிப்பூர், 5. இயக்குநர் கலாச்சாரம், ஒடிசா, 6. கலாச்சார விவகாரங்கள் & பாரம்பரியத் துறை, சிக்கிம், 6. செயலாளர் மற்றும் இயக்குநர், திரிபுரா 7. இணைச் செயலாளர் & முன்னாள் அதிகாரி, கலாச்சார இயக்குநர், மேற்கு வங்காளம், 8. கலை மற்றும் கலாச்சாரத் துறை, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் நிர்வாகம்.
Remove ads
திட்டங்கள்
மண்டல கலாச்சார மையங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகம் நிதியுதவி செய்யும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள்: தேசிய கலாச்சார பரிமாற்ற திட்டம், நாடகப் புத்துணர்ச்சி திட்டம், வடகிழக்கு திட்டம், குரு சிஷ்ய பரம்பரை மற்றும் இளம் திறமை தேடல். இளைஞர்களிடையே கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்குப் பின்வரும் துறைகளில் பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன:
- நாட்டுப்புற இசை
- கிராமிய நாட்டியம்
- பாரம்பரிய இசை
- பாரம்பரிய நடனம்
இந்த இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க, கிழக்கு மண்டல கலாச்சார மையம் பல்வேறு ஆசிரிய மாணவ பரம்பரை திட்டங்களை ஏற்பாடு செய்கிறது, இதில் பின்வருவன அடங்கும்:
- கோட்டிபுவா நடனம் (ஒடிசா)
- புருலியா சாவ் நடனம் (மேற்கு வங்கம்)
- பைகா / பைக்கா அகாடா ஒரு போர் நடனம் (ஒடிசா)
- நௌடா (மேற்கு வங்கம்)
- போர்டோஷில்கா (அசாம்)
- தங்-டா நடனம் (மணிப்பூர்)
- பாட்டியாலி நாட்டுப்புறப் பாடல்கள் (மேற்கு வங்காளம்)
- குசன் நடனம் (அசாம்)
- பங் சோலோம் (மணிப்பூர்)
- மருனி (சிக்கிம்)
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமாகும். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் வங்காளதேசம் மற்றும் அசாம் மாநிலத்துடன் கலாச்சார மற்றும் மொழியியல் பண்புகளைப் பகிர்ந்து கொண்டு மேற்கு வங்காளம் இன மொழியியல் பிராந்தியம் ஒன்றை உருவாக்குகிறது. வங்காள தேசத்துடன் இணைந்த ஒன்றுபட்ட நிர்வாக பிராந்தியமாக 1947 வரை செயல்பட்டது.
ஒடிசி நடனம் பழமையான பாரம்பரிய நடனம் ஆகும். பட்டாச்சித்ரா மிகவும் செல்வாக்கு மிக்க பண்டைய பாரம்பரிய ஓவியமாகும். பாரம்பரிய ஒடிஷியன் தனித்துவமான பண்டைய கட்டிடக்கலை கலிங்க கட்டிடக்கலையில் கட்டப்பட்டவை கொனார்க், லிங்கராஜா, லலித்கிரி போன்றவை. ஒடியா மட்டுமே இந்தியாவில் செம்மொழி தகுதி பெற்ற ஒரே நவீன இந்தோ-ஆரிய மொழியாகும். மேலும் ஒடிசி இசையானது கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையின் பாரம்பரிய இசை எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பிற பிராந்திய கலாச்சார மையங்கள்
- வடக்கு மண்டல கலாச்சார மையம், பாட்டியாலா, பஞ்சாப்
- மேற்கு மண்டல கலாச்சார மையம் உதய்பூர், ராஜஸ்தான்
- வடகிழக்கு மண்டல கலாச்சார மையம், திமாபூர், நாகாலாந்து
- தென் மண்டல கலாச்சார மையம், தஞ்சாவூர், தமிழ்நாடு
- தென்-மத்திய மண்டல கலாச்சார மையம், நாக்பூர்
- வட மத்திய மண்டல கலாச்சார மையம், அலகாபாத், உத்தரப்பிரதேசம்
இந்தியாவின் கலாச்சார மண்டலங்கள் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட ஏழு பகுதிகளாகும்.[3] இவை ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads