வந்தாறுமூலை
இலங்கையில் உள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வந்தாறுமூலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை உள்நாட்டுப் போரின் போது 1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் 175 பேர் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்று அழைக்கபடுகின்றது.
இப்பிரதேசத்திற்கு வந்தாறுமூலை என பெயர் வர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, கண்ணகி மதுரையை எரித்துவிட்டு உக்கிர கோபத்துடன் இலங்கை வந்த போது இப்பிரதேசத்தில் வந்து தன் கோபம் ஆற்றப் பெற்றதாகவும், அதனாலேயே இக் கிராமம் வந்தாறுமூலை (வந்து+ஆறிய+மூலை) எனப் பெயர் பெற்றது.
இக்கிராமத்தில் ஐந்து முக்கிய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவை வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் மற்றும் வந்தாறுமூலை காட்டித்தந்த எண்கோணேஸ்வரர் ஆலயம், வந்தாறுமூலை மாகாளி அம்மன் ஆலயம்,வந்தாறுமூலை நீர்முக பிள்ளையார் ஆலயம்
என்பனவாகும்.
Remove ads
நீர்ப்பாசனக் குளங்கள்
வந்தாறுமூலையில் காணப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் பின்வருமாறு. அவற்றில் பல தூர்ந்து போன நிலையிலுள்ளன.
- குளத்து வெட்டைக் குளம்
- ஈரனைக்குளம்
- விற்பனை மடுக் குளம்
- சமுனையடிப் பொத்தனைக் குளம்
- சின்னத்துரைச் சோலையடிக் குளம்
- பெரியசின்னத்துரைச் சேனைக் குளம்
- அயண ஓடைக் குளம்
- இலுக்குப் பொத்தானைக் குளம்
ஆலயங்கள்
- வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம்
- நீர்முகப் பிள்ளையார் ஆலயம்
- வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலயம்
- வந்தாறுமூலை காட்டித்தந்த எண்கோணேஸ்வரர் ஆலயம்
- மருங்கையடி சித்தி விநாயகர் ஆலயம்
- வந்தாறுமூலை ஸ்ரீ மாகாளி அம்மன் ஆலயம்
- உப்போடை வயற்கரை விநாயகர் ஆலயம்
- வந்தாறுமூலை ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயம்
- வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயம்
- வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads