வர்சா கெய்க்வாட்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

வர்சா ஏக்நாத் கெய்க்வாட் (Varsha Gaikwad)(பிறப்பு 3 பிப்ரவரி 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் மும்பை பிராந்தியக் காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். முன்னதாக, இவர் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராக இருந்தார். மும்பையில் உள்ள தாராவி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2004 முதல் 2024 வரை காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் (2004-2024).[1][2][3][4] இவர் 30 திசம்பர் 2019 முதல் 29 சூன் 2022 வரை மகாராட்டிராவின் அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் வர்சா கெய்க்வாட், இந்திய மக்களவை உறுப்பினர் ...

கெய்க்வாட் 2024 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை தோற்கடித்தார். 18வது மக்களவையில் உள்ள மூன்று புத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

Remove ads

வகித்தப் பதவிகள்

  • 2004-2009: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (முதல் முறை)
  • 2009-2014: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (2வது முறை)
    • 2009-2010: மாநில மருத்துவ கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சுற்றுலா, சிறப்பு உதவி அமைச்சர்
    • 2010-2014: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சர், மகாராட்டிரா அரசு [5][6]
  • 2014-2019: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (3வது பதவிக்காலம்)
  • 2019-2024: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (4வது பதவிக்காலம்)
  • 2024-தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

வர்சா கெய்க்வாட்டின் தந்தை ஏக்நாத் கெய்க்வாட், இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் அம்பேத்காரிய புத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[7][8] மும்பையில் உள்ள சித்தார்த் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி விரிவுரையாளராக இருந்தார்.[9]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads