வர்மக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வர்மக்கலை(Varma kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக[சான்று தேவை] இது குருக்காளால் கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
Remove ads
வர்மம்
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.[1] அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.[2]
- வர்ம முனைகள்
- கழுத்துக்கு மேல் 25
- கழுத்திலிருந்து தொப்புள் வரை 45
- தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9
- இரு கைகளிலும் 14
- இரு கால்களிலும் 15
- ஆக மொத்தம் 108
Remove ads
ஊடகங்களில்
- வர்மக்கலையை மையமாகக் கொண்டு ஊழலுக்கு எதிராக சங்கரின் இயக்கத்தில் இந்தியன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் வர்மக் கலையை அறிந்தவராக கமலஹாசன் நடித்தார்.
- தொலைக்காட்சி தொடரான மர்ம தேசத்தில் இயந்திரப் பறவை என்ற பெயரில் வெளிவந்த பகுதியில் வர்மக் கலையின் ஒரு கலையான வளரியை மையமாக கொண்டு வெளிவந்தது.[சான்று தேவை]
மேலும் பார்க்க
வர்மக்கலை ஆய்வாளர்கள்
சுவடிகளும் நூல்களும்
- வர்மசூத்திரம் (சுவடி) - போகர்
- வர்மசூத்திரம் (நூல்)
- ஒடிமுறிவுசாரி (சுவடி) - அகத்தியர்
- வர்மக்கண்ணாடி (சுவடி)
- வர்ம பீரங்கி (சுவடி)
- தொடுவர்மத்திரட்டு (சுவடி)
- படுவர்மங்கள் (சுவடி)
- சித்தமருத்துவத்தில் வர்மப் பரிகாரம்
- வர்ம காண்டம் - புலிப்பாணி
- படுவர்மத்திரட்டு (சுவடி)
- வர்ம சூட்சம் (சுவடி)
- வர்மகண்டி (சுவடி)
- வர்ம சூடாமணி (சுவடி)
- வரம பீரங்கித் திறவுகோல் (சுவடி)
- வரம வைத்தியம் (சுவடி)
- வர்ம அடங்கல் முறை
- வர்ம அளவு நூல்
- வர்ம சாத்திரம்
- வாகட நிதானம்
- வர்ம திறவு கோல்
- வர்ம களஞ்சியம் - பதஞ்சலி
- வர்ம சஞ்சீவி - தனிவந்திரி சித்தர்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads