வாண்டையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாண்டையார்‌ (Vandayar) என்னும்‌ பட்டம்‌ வண்டையர்‌ என்னும்‌ பெயரின்‌ திரிபாகக் கொள்ளப்படுகிறது.[1] வாண்டையார்‌ என்னும்‌ பட்டம்‌ கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களுள்‌ ஒன்று என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி விளக்கம்தருகிறது.[2] சோழர் காலத்தில் வாளுடையவர்கள் என்பவர்கள், பிற்காலத்தில் மருவி வாண்டையார்கள் என அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.[3] தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளர் சாதிக்குள் வந்தையர் ஒரு அகமணக் குழுவாகும்.[4]

கருணாகரத் தொண்டைமான் வண்டையர்‌ கோன்‌ என அழைக்கப்பட்டமையும்‌, வல்லம்‌ என்னும்‌ தென்னார்க்காட்டுப்‌ பகுதியை ஆண்டவன்‌ வல்லவரையன்‌ வண்டையத்‌ தேவன்‌ எனப்பட்டதும்‌ காணலாம்‌.[5] கலிங்கத்துப்‌ பரணியின்‌ பாடல்களில்‌ வண்டைமன்‌ தொண்டைமான்‌, வண்டைநகர்‌ அரசன்‌, வண்டையர்க்கு அரசு, வண்டை வேந்தன்‌. வண்டையர்‌ அரசன்‌, வண்டையர்‌ கோன்‌” என்றெல்லாம்‌ கருணாகரத்‌ தொண்டைமான்‌ சிறப்பித்து அழைக்‌ கப்படுகிறான்‌.[6] வாண்டையார், தெத்து வாண்டையார், பருதி வாண்டையார், நெடுவாண்டையார், வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் என்று மருவி கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களாக உள்ளன. [7]

Remove ads

கல்வெட்டுகளில் வாண்டையார்

  • 1453 ஆண்டு அறந்தாங்கி தொண்டைமான் அழகிய மணவாளப்பெருமாள்‌ தொண்டைமானார் ஆட்சியில் பழங்கரை புராதனபுரீசுவரர்‌ கோயில்‌ வடபுற கல்வெட்டில் வாண்டையார்கள் குறிக்கப்படுகிறார்கள்.[8]
  • 17 ஆம் நூற்றாண்டு சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூர்‌ வட்டம்‌, ஆறகளூர் வெளிப்பாளையத்தில்‌ உள்ள நவகண்ட சிற்பம்‌ அருகே வயலில்‌ இருக்கும்‌ பலகைக்கலில், மாரிமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார்‌ என்பவர்‌ ஆறகமூரில்‌ உள்ள திருக்காமீசுரமுடைய தம்பினாருக்கு குமாரபாளையம்‌ என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார்.[9]
  • தஞ்சாவூர்' தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கிழக்குத்‌ திருச்சுற்று தரையில்‌ உள்ள கல்வெட்டில் மாரியப்ப வாண்டையார்‌ மகன்‌ குப்பமுத்து என்பவன்‌ யாசகம்‌ பெற்று, மக்கள்‌ இட்ட அந்த உபயம்‌ கொண்ரு பெரிய பிரகாரத்தின்‌ தளவரிசை வகையறா போட்டதை அறியலாம்‌.[10]


Remove ads

வாண்டையார் பெயரில் உள்ள இடங்கள்

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads