வானமா தேவி (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வானமா தேவி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல அரசியாவார். இவர் சுந்தர சோழரின் மனைவியும், ஆதித்த கரிகாலன் இளைய பிராட்டி குந்தவை அருள்மொழிவர்மன் ஆகியோரது அன்னையும் ஆவார்.

விரைவான உண்மைகள் அருள்மொழிவர்மன், உருவாக்கியவர் ...

சுந்தர சோழர் நோயுற்று படுக்கையிலிருந்த போது நொடியும் அவரைப் பிரியாது, அவருக்குத் துணையாக இருக்கிறார். இரவு பகலாக அவரைக் கவனித்து வருகிறார். மலையமான் என்கிற சிற்றரசரின் மகளானவர். மந்தாகினி தேவி சுந்தர சோழரை காண வருகின்ற போது, சகோதரியாக பாவிக்கிறார். மந்தாகினியின் தோற்றத்தினைக் கண்டு சுந்தர சோழர் பயம் கொள்கிறார் என்று அவரின் மனம் அறிந்து குந்தவையிடம் மந்தாகினியை அலங்கரிக்கும் படி கூறுகிறார். சிறிது நேரத்தில் மந்தாகினியைக் காணவில்லை என்று அந்தப்புரத்துப் பெண்கள் தெரிவிக்கும் போது, அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கம் கொண்டு அவர் சென்றிருப்பார் எனத் தெரிவிக்கிறார்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads