விக்ரம்சீலா சேது

இந்தியாவில் காணப்படும் பெரிய பாலங்களில் இதுவும் ஒன்று From Wikipedia, the free encyclopedia

விக்ரம்சீலா சேது
Remove ads

விக்கிரமசீலா சேது (Vikramshila Setu) என்பது இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் கங்கை ஆற்றின் குறுக்கே செல்லும் பாலமாகும். கி.பி 783 முதல் 820 வரையிலான காலத்தைச் சார்ந்த அரசர் தர்மபாலர் நிறுவிய பண்டைய விக்கிரமசீலா புத்த விகாரத்தின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் விக்ரம்சீலா சேதுVikramshila Setu, ஆள்கூற்று ...

இந்தியாவில் நீர்மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் மூன்றாவது மிகநீளமான பாலம் விக்கிரமசீலா சேது பாலமாகும். இருவழிப் பாதையாக 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாலம், தேசிய நெடுஞ்சாலை 80 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 31 இரண்டையும் இணைக்கிறது. இவ்விரு சாலைகளும் கங்கை நதிக்கு எதிரெதிர் திசைகளில் செல்கின்றன. கங்கை நதியின் தென்கரையில் உள்ள பாகல்பூரின் பராரி மலைத்தொடரில் தொடங்கும் இப்பாலம் கங்கை நதியின் வடகரையில் உள்ள நௌகாச்சியா வரை செல்கிறது. மேலும் இப்பாலம் பாகல்பூரை பூர்ணியா மற்றும் கத்தியார் நகரங்களுடன் இணைக்கிறது. பாகல்பூர் மற்றும் கங்கையின் குறுக்காக உள்ள மற்ற சில ஊர்களுக்கு இடையே உள்ள தொலைதூர சுற்றுச்சாலைப் பயண நேரம் இப்பாலத்தினால் வெகுவாக குறைகிறது.[1] இருப்பினும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலால் இப்பாலம் மிகுந்த நெரிசலால் திணறுகிறது. எனவே இதற்கு இணையாக மற்றொரு பாலம் கட்டப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads