விக்கிரமசீலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்கிரமசீலா (Vikramashila) (IAST: Vikramaśilā) பாலப் பேரரசு மற்றும் நந்தர்கள் காலத்தில் தற்கால பிகார் மாநிலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய கல்வி மையமாக விளங்கியது. பாலப் பேரரசர் தர்மபாலர் (பொ.ஊ. 783–820) விக்கிரமசீலா பௌத்த கல்வி மையத்தை நிறுவினார்.[1][2] இக்கல்வி மையத்தை தில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகள் பொ.ஊ. 1200 முற்றிலும் சிதைத்து விட்டது.[3] பண்டைய விக்கிரமசீலா நகரம், தற்கால பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின் ஆண்டிசக் எனும் கிராமத்தின் பெயர் கொண்டுள்ளது. இக்கிராமம் பாகல்பூரிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கிரமசீலாவைப் பற்றிய குறிப்புகள் திபெத்திய பௌத்த சாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறது.[4]
நாளாந்தா மற்றும் தக்சசீலாவைப் போன்று விக்கிரமசீலா பௌத்தக் கல்வி மையத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்றனர்.
Remove ads
படக்காட்சிகள்
- விக்கிரமசீலாவின் சிதிலங்கள்
- விக்கிரமசீலா அருங்காட்சியகம்
- விக்கிரமசீலா பல்கலைகழகத்தின் தூண்கள்
- விக்கிரமசீலாவில சிதலங்கள்
- அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விக்கிரமசீலாவின் வரலாறு
- விக்கிரமசீலாவின் பராமரிப்பு பணிகள்
- தூபியைச் சுற்றியுள்ள தோட்டங்கள்
- சிதிலங்களுக்கிடையே ஒரு கருங்கல் தூபி
- சுவர்களில் தேவதைகளின் சிற்பங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads