விசில்
ஜே. டி. ஜெரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசில் (Whistle) என்பது 2003 ஆம் ஆண்டில் ஜே. டி. ஜெரி இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி திகில் திரைப்படம் ஆகும். இது 1998 இல் வெளியான 'அர்பன் லெஜன்ட்' என்ற ஆங்கில திகில் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்துள்ளார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் காயத்திரி ரகுராம் மற்றும் செரின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
விசில் படம் 4 ஜூலை 2003 ஆம் ஆண்டு வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், டி. இமான் இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் விவேக்கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.[2]
Remove ads
நடிகர்கள்
- விக்ரமாதித்யா - ஜீவா
- காயத்திரி ரகுராம் - அஞ்சலி
- செரின் - மாயாவதி
- விவேக் - சகாதேவன்
- மயூரி - ஷர்மி
- திவ்யதர்சினி - சரஸ்வதி
- பானு சந்தர் - சையத்
- சீனு மோகன்
- வைஷ்ணவி - ஸ்வேதா
- லிவிங்ஸ்டன் - பேராசிரியர் பன்னீர்செல்வம்
- செந்தில் - கல்லூரி கேண்டீன் பொறுப்பாளர்
- மயில்சாமி - சகாதேவனின் நண்பர்
- மனோரமா - வினோத்தின் அம்மா
- ராஜ் கபூர் - பாஜி
- மனோபாலா - கல்லூரி பேராசிரியர்
- தேனி குஞ்சரம்மாள் - சகாதேவனின் பாட்டி
- என். மாத்ருபூதம் - வைத்தியராக (சிறப்புத் தோற்றம் )
- சிவா - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
- பிரேம்ஜி அமரன் - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
Remove ads
உற்பத்தி
இந்த படம் உல்லாசம் மற்றும் பாண்டவர்கள் படத்திற்கு பிறகு இயக்குநர் ஜே. டி. ஜெரியின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழில் உருவாகும் முதல் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.[3] இது மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் 6வது படம் ஆகும்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads