விடலைப் பருவ நாடகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விடலைப் பருவ நாடகம் (Teen drama) டீன் ஏஜ் நாடகம் என்பது விடலைப் பருவ கதாபாத்திரங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தி எடுக்கப்படும் ஒரு வகை நாடகத் தொடர் ஆகும். இந்த வகை நாடகம்1990 களின் முற்பகுதியில் முக்கியத்துவம் பெற்றது, குறிப்பாக பாக்ஸ் தொலைக்காட்சி தொடரான பெவர்லி ஹில்ஸ், 90210 என்ற தொடர் 1986 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த வகை தொடரின் வெற்றிக்கு பிறகு, தொலைக்காட்சி எழுத்தாளர்களும் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த புதிய வகை தொடர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. கடந்த காலங்களில், இளைஞர்களை மையமாகக் கொண்ட பெரும்பாலான தொடர்கள் சிட்காம்களாக இருந்தன, அதே நேரத்தில் நாடகத் தொடர்களில் இளம் பருவத்தினர் பொதுவாக பெரியவர்களையும் குழந்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய குழுமத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

பெரும்பாலும், விடலைப் பருவ நாடகங்களில் நாடகத் தொடர் கூறுகள் உள்ளன, பல அத்தியாயங்களில் பரவியிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதை வளைவுகளை உள்ளடக்கியது. இந்த நாடகங்கள் இளம் கதாபாத்திரங்கள் தங்கள் நட்பு மற்றும் காதல் ஆகியவற்றில் வரும் பிரச்சனைகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளைக் எப்படி கையாளுகின்றார்கள், அதே சமயம் இளமைப் பருவத்தி னர்கள் மேற்கொள்ளும் சவால்களை சுற்றியும் கதை சொல்லப்படுகின்றது. அறிவியல் புனைவு, கனவுருப்புனைவு, அதிரடி, பள்ளிக்காலம் மற்றும் சாகசம் போன்ற கருப்பொருள்களை கொண்டு பல பாணியில் நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றது.

Remove ads

தமிழ் தொலைக்காட்சித் துறை

இந்த வகைத் தொடர்கள் தமிழ் தொலைக்காட்சித் துறையில் தயாரிப்பது மிகக்குறைவு. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விஜய் தொலைக்காட்சி யில் கனா காணும் காலங்கள் என்ற முதல் விடலைப் பருவ நாடகம் ஒளிபரப்பானது. இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை,[1][2][3] கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்,[4] காதல் சார்ந்த இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை, அன்பே வா போன்ற தொடர்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்லூரி காலம், ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனவுகள் ஆயிரம், கிருஷ்ணா காட்டேஜ் போன்ற தொடர்கள் இதற்குள் அடங்கும்.

சிங்கப்பூர் நாட்டு வசந்தம் தொலைக்காட்சியில் வெற்றி,[5] காவியா, தில்லானா, கலாபக் காதலா, அகரம் போன்ற பல விடலைப் பருவ நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகைத் நாடகங்கள் பல பருவங்களாக ஒளிபரப்பாகியுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads