விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia

விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்
Remove ads

வழித்துணைநாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1] விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.

விரைவான உண்மைகள் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோ முன்று சக்கர வாகனத்திலோ சென்றால் அடையலாம். இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலின் இராஜகோபுரம் மற்றும் கலைநயத்துடன் அமைக்க பட்டுள்ள சிற்பங்கள் நிறைந்த அர்த்த மண்டபம் மகா மண்டபம் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

Remove ads

ஹே சங்கரீ புராண வரலாறு

பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பெற்ற முனிவர்|முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம் கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என அழைக்க விளையாட்டாகக் கேட்டார் எனவும் இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஜந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார் என்பது வரலாறாக கூறப்படுகின்றது. அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு.

Remove ads

சிவசர்மன் புராண வரலாறு

சிவபெருமானின் திருமுடையைக் காண பிரம்மனும் பாதத்தினைக் கண்டு வருவதாக திருமாலும் சென்ற வேளை நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார் அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனைப் பூசை செய்து வந்த சிவநாதன் - நயனா, நந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார், பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார் சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார் எனக் கருதப் படுகின்றது. கனவு கண்ட மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன் சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தினை அடைந்து பூசைகள் செய்ய அதை ஏற்க சிவன் தலை சாய்த்ததாகக் கூற்றுக்கள் உளன குறிப்பிடத்தக்கது.

இறைவன், இறைவியர்

இக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார்.[1] மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். மேலும் இக்கோயிலில் விநாயகர், முருகன்உடன் வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.

பூஜைகள்

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்பிக்கைகள்

  • கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாக காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக காய்க்கின்றன.[2] மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.
  • சிம்மக்குள நீராடல் - பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடிப்பின் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
Remove ads

நேரம் காட்டும் கல்

கோயிலின் உள்ளே தென்புறத்தில் விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட "நேரம் காட்டும் கல்" உள்ளது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

கல்வெட்டுகள்

பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்கு பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பட்டது. பொ.ஊ. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி 'பிராமணர்களில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகா தானம் ஆக செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.' என விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads