விளதீமிர் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

விளதீமிர் மாகாணம்
Remove ads

விளதீமிர் மாகாணம் (Vladimir Oblast, உருசியம்: Влади́мирская о́бласть, விளதீமிர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் விளதீமிர் நகரம் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து கிழக்கே 190 கிலோ மீட்டர் (120 மைல் ) தொலைவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள்தொகை (2010 ஆண்டு கணக்கெடுப்பு) 1,443,693.[8] இங்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல் இடம்பெற்ற 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் உட்பட விளாடிமிர், சுஸ்டாய், போக்லையுபோவ், கிடிக்சா போன்ற பகுதிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் விளதீமிர் மாகாணம்Vladimir Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

விளதீமிர் ஒப்லாசுது எல்லைகளாக மாஸ்கோ ஓப்லஸ்து, யாரோஸ்லோவ் ஒப்லாஸ்து, இவானோவா ஒப்லாஸ்து , ரயாசன் ஒப்லாஸ்து, நிசானி நோவோக்ரோண்ட் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன. இந்தஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் மையத்தில் அமைந்துள்ளது. பிராந்தியத்தின் முக்கியமான ஆறுகள் கிளையாஸ்மா மற்றும் ஒக்கா ஆகும். சுமார் முந்நூறு ஏரிகளும் உள்ளன. ஒப்ளாஸ்து கலப்பு காடுகள் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

  • ஒப்லாஸ்து மக்கள் தொகை: 1,443,693 ( 2010 கணக்கெடுப்பு ); 1,523,990 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,653,938 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
  • பிறப்பு (2012): 16 445 (1000 க்கு 11.5)
  • இறப்பு (2012): 23 733 (1000 க்கு 16.6) [12]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[13]

2009 - 1.46 | 2010 - 1.46 | 2011 - 1.50 | 2012 - 1.62 | 2013 - 1.59 | 2014 - 1.65 (எதிர்பார்ப்பு)

இனக்குழுக்களின் விகிதாச்சார விவரம்(2010)
[8]
  • உருசியர்கள் : 95,6%
  • உக்ரைனியர்கள் : 0.9%
  • தடார்களுக்கும் : 0.5%
  • ஆர்மேனியர்கள் : 0.5%
  • பெலாரஷ்யர்கள் : 0.3%
  • மற்றவர்கள்: 2.2%
  • 95.410 பேர் நிர்வாக தரவுத்தளங்களில் தங்களின் இனக்குழுவை பதிவு செய்யவில்லை.[14]
Remove ads

சமயம்


Thumb

விளதீமிர் ஒப்லாஸ்து சமயம் (2012)[15][16]

  பொதுவான கிறித்துவர் (5%)
  ஸ்லாவிக் பழங்குடி சமயத்தினர் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (32%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (4.7%)

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [15] விளதீமிர் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 42.3% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 5% பொதுவான கிருஸ்துவர் , 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% இந்து மதத்தினர், 32% மத ஈடுபாடு அற்றவர்கள் 14% நாத்திகர், 4.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[15]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads