விளந்தை (அரியலூர் மாவட்டம்)

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விளந்தை (Vilandhai) இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[1][2]. வடக்கு விளந்தை, தெற்கு விளந்தை என்ற இரண்டு பகுதிகளாக இக்கிராமம் பிரிக்கப்பட்டுள்ளது. நெசவுத் தொழில் இங்கு முக்கியமான வணிகமாகும். சிறீ அகத்தீசுவரர் கோயில்-ஆண்டிமடம் [தொடர்பிழந்த இணைப்பு], கங்கைகொண்ட சோழபுரம், (யுனெசுகோ), சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் மாங்குரோவ் காடு படகுவீடு, சிதம்பரம், விருதாச்சலம் பழமலைநாதர் சிவன் கோயில் போன்றவை அருகிலுள்ள சில முக்கிய இடங்களாகும். இந்த ஊராட்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]

விரைவான உண்மைகள் விளந்தைVilandhai, நாடு ...
Remove ads

மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தெற்கு விளந்தையின் மொத்த மக்கள் தொகை 9663 ஆகும். இதில் 4855 ஆண்களும், 4808 பெண்களும் இருந்தனர். வடக்கு விளந்தையின் மொத்த மக்கள் தொகை 2012 ஆகும். இதில் 1009 ஆண்களும், 1003 பெண்களும் இருந்தனர்.

பெயர்க்காரணம்

வில்வ மரங்கள் அடர்ந்து காணப்பட்ட காரணத்தால் ஊரின் பெயர் விளந்தை என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads