விளாதிமிர் கொரலென்கோ

From Wikipedia, the free encyclopedia

விளாதிமிர் கொரலென்கோ
Remove ads

விளாதிமிர் கலக்தியோனவிச் கொரலென்கோ (Vladimir Galaktionovich Korolenko, உக்ரைனியன்: Володимир Короленко, வலஜிமிர் கரலென்கோ; உருசியம்: Влади́мир Короле́нко, விளதீமிர் கரலியென்கோ, 27 சூலை [யூ.நா. 15 சூலை] 1853 - 1921 டிசம்பர் 25) என்பவர் உருசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர். சிறுகதை, வர்ணனைக் கட்டுரை என்ற இலக்கிய வடிவங்களில் தலை சிறந்து விளங்கியவர். சைபீரியாவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இவர் வாழ்ந்த போது தமது அனுவங்களை இவர் சிறுகதைகளாக எழுதினார். சார் மன்னரின் ஆட்சி, மற்றும் தனது இறுதிக் காலத்தில் போல்செவிக்குகளையும் இவர் விமரிசித்தார்.

விரைவான உண்மைகள் விளாதிமிர் கொரலென்கோ, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

கொரலென்கோ 1853 ஆம் ஆண்டில் உருசியப் பேரரசில் சித்தோமிர் என்ற இடத்தில் (இன்றைய வடக்கு உக்ரைனில்) கசாக் இனத்தில் பிறந்தார். தமது ஊரில் ஆரம்பக் கல்வியைக் கற்ற கொரலென்கோ 1871 இல் சென் பீட்டர்சுபர்க் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து இரண்டரை வருடங்களை மிகவும் சோதனையான காலத்தில் கழித்தார். இக்காலகட்டத்தில் அவரது தந்தை இறந்து விட்டதால், படிப்பதோடு பணம் சம்பாதிக்கவும் முயற்சி செய்தார். 1873 ஜனவரியில் கல்லூரியில் இருந்து படிப்பை நிறுத்திய பின்னர், 1874ஆம் வருடத்தில் மாஸ்கோவிலுள்ள விவசாய மற்றும் வனத்துறைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். மாணவர்களுடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக விலக்கப்பட்டார். 1876 ஆம் ஆண்டில் சிறிது காலத்திற்கு இவர் குரொன்ஸ்டார்ட் என்ற இடத்திற்கு விலக்கி வைக்கப்பட்டார்.

Remove ads

இலக்கியப் பங்களிப்பு

Thumb
இளம் வயதில் கொரலென்கோ

1879 ஆம் ஆண்டில் இவர் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். இவரது புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ஐந்தாண்டுகள் கீரொவ் என்ற இடத்துக்கு விலக்கி வைக்கப்பட்டார். 1881 இல் புதிய மன்னர் மூன்றாம் அலெக்சாந்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தமையால், இவர் சாக்கா குடியரசின் யாக்கூத்தியா நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து திரும்பிய பின்னர் மீண்டும் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். மக்காரின் கனவு என்ற சிறுகதை 1892 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நீஷ்னிய் நோவகோரத் என்ற இடத்திற்குக் குடியேறி அங்கு வாழ்ந்து ந்தார். அங்கிருந்து பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். வரலானார். 1886 இல் குருட்டு இசைக்கலைஞன் (Слепой музыкант) என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

1893 ஆம் ஆண்டில் சிகாகோ கண்காட்சிக்கு சென்றிருந்த வேளையில் "மொழிகள் இன்றி" (Без языка) என்ற புதினத்தை எழுதினார். அமெரிக்காவில் குடியேறி வாழும் உக்ரைனியர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி இப்புதினம் அமைந்திருந்தது. இவரது கடைச்க் கதை 1900 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

Thumb

இவரைத் தான் சந்தித்த நூற்றுக்கணக்கான மனிதர்களில் முழுமையான மனிதர் என்று மாக்சிம் கார்கி குறிப்பிட்டுள்ளார். இவர் இருநூறுக்கும் அதிகமான கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் கடிதங்கள், நாட்குறிப்புகள் கையேடுகளைக் கொண்ட மாபெரும் இலக்கிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். இவை பத்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

Remove ads

கருவி நூல்

கண் தெரியாத இசைஞன் குறுநாவல் - ராதுகா பதிப்பகம், மாஸ்கோ; இரண்டாவது பதிப்பு : 1983 விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads