விவேகானந்தபுரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விவேகானந்தபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம் வட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியானது, கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பராமரித்து வரும் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடமாகும்.[2]

விரைவான உண்மைகள் விவேகானந்தபுரம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 44.13 மீ. உயரத்தில், (8.0940°N 77.5483°E / 8.0940; 77.5483) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விவேகானந்தபுரம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
விவேகானந்தபுரம்
விவேகானந்தபுரம்
விவேகானந்தபுரம் (தமிழ்நாடு)

சமயம்

கோயில்கள்

இங்குள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் ரூ.25 கோடி செலவில் பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது.[3][4] இந்த பாரத மாதா கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை சுமார் 12 அடி உயரம் கொண்டும், அச்சிலை அமைந்துள்ள பீடம் சுமார் 20 அடி உயரத்திலும் காணப்படுகின்றன.[5] மேலும், சக்கர தீர்த்த காசிவிசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும் விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads