விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பது கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இது பெளகாவியில் உள்ளது. இதை 1998ஆம் ஆண்டின் ஏப்ரல் முதலாம் நாளில் கர்நாடக அரசு நிறுவியது.[9] கர்நாடகத்தில் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் பாடங்களை கற்பிக்கும் கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.[10]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

இதுக்கு அறிவியலாளரான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்திய அளவில் பாரத ரத்னா விருதைப் பெற்ற ஒரே பொறியாளர் இவரே. இந்த பல்கலைக்கழகம் பெங்களூர், குல்பர்கா, மைசூர் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.

இது இந்திய அளவில் பெரிய பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தக்கது. இதனுடன் 208 கல்லூரிகள் இணைந்துள்ளன. ஆண்டு தோறும் 67100 இளநிலை மாணவர்களும், 12666 முதுநிலை மாணவர்களும் சேர்கின்றனர். இங்கு இளநிலையில் 30 பாடப்பிரிவுகளும், முதுநிலையில் 71 பாடப்பிரிவுகளும் உள்ளன.[11][12]

Remove ads

துறைகள்

இது பொறியியல் துறையில் பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads