வீரநாராயணர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

வீரநாராயணர் கோயில்map
Remove ads

வீரநாராயணர் கோயில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வீரநாராயணர் கோயில், பெலவாடி, அமைவிடம் ...
Thumb
வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா

போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கி.மீ. தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.

Thumb

Remove ads

சன்னதிகள்

வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.[1]

கட்டிடக்கலை

போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன், கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில், பச்சை நிற சோப்புக்கல் பாறைகளால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று கிருட்டிணன், நரசிம்மர் மற்றும் சன்னதிகள் உள்ளது. [2]

மூன்று சன்னதிகளும் கோபுரங்களுடன் கூடியது. பேளூரில் மற்றும் ஹளேபீடுவில் உள்ள கோயில்கள் நுண்ணிய அழகியச் சிற்பங்களுக்கும், வீரநாராயணர் கோயில் அழகியக் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது.[3]

இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது.[4] இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது.[5]

Thumb
கடைந்தெடுத்த தூண்களுடன் கூடிய உள் மண்டபம்
Thumb
வெளி மண்டபத்தின் வேலைபாடுகள் மிக்க கூரை

இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.[6]

கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.

Remove ads

படக்காட்சிகள்

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads