வீரயுக நாயகன் வேள்பாரி
சு. வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புதினம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரயுக நாயகன் வேள்பாரி, சு. வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புதின நூலாகும். இதனை ஆனந்த விகடன் தொடராக 111 வாரங்கள் வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு மணியம் செல்வன் ஓவியங்களை வரைந்துள்ளார்.[1] [2]
Remove ads
கதை
இந்நூல், வள்ளல் பாரியின் வரலாற்றைக் கூறும் புதினமாகும்.
வெளியீடு
1408 பக்கங்களை இரண்டு பாகங்களாகக் கொண்ட இந்நூலினை மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பாகத்தைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும் இரண்டாம் பாகத்தைத் சூழலியலாளர் கோ.சுந்தர்ராஜனும் பெற்றுக்கொண்டனர்.[3] [4] சூலை 2025இல் இந்நூல் ஒரு இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டதற்காக விழா கொண்டாடப்பட்டது.[5][6]
விருது
மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் இந்நூலினை அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தோ்வு செய்துள்ளது.[7] [8] 2018 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடனின் சிறந்த புதினத்துக்கான விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது.[9]
திரைப்படம்
இப்புதினத்தை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது. இக்கதையின் திரைப்பட உரிமையை ஷங்கர் வாங்கியுள்ளார்.[10] [11] [12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
