வெம்பாக்கம் பேரூராட்சி
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெம்பாக்கம் (Vembakkam) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்த வட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இது செய்யார் (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
Remove ads
அமைவிடம்
வெம்பாக்கம், ஆற்காடு - வெம்பாக்கம் - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 17 கி. மீ தொலைவிலும், செய்யாரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் மற்றும் ஆரணியிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலைக்கு 107 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
Remove ads
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 26980 ஆகும். இவர்களில் பெண்கள் 13040 பேரும், ஆண்கள் 13940 பேரும் உள்ளனர்.
நிர்வாகம் மற்றும் அரசியல்
வருவாய் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் வெம்பாக்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வெம்பாக்கம் உள்ளது. இந்த வட்டத்தில் 96 வருவாய் கிராமங்களும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,24,188 உள்ளனர்.. இந்த வட்டத்தில் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெம்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.
அரசியல்
வெம்பாக்கம் நகரம் மற்றும் வெம்பாக்கம் வட்டம் மக்கள், செய்யார் (சட்டமன்றத் தொகுதி)கற்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
சாலை வசதிகள்
வெம்பாக்கம் நகர்த்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
1. பிரம்மதேசம் - வெம்பாக்கம் - செய்யார் சாலை
2. ஆற்காடு - வெம்பாக்கம் - காஞ்சிபுரம் சாலை
3. வெம்பாக்கம் - கலவை - மாம்பாக்கம் - ஆரணி சாலை
பேருந்து வசதிகள்
வெம்பாக்கம் நகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
- ஆரணியிலிருந்து, கலவை வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும்.
- கலவையிலிருந்து, காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும்.
- செய்யார் , ஆரணி, காஞ்சிபுரம், பிரம்மதேசம், ஆற்காடு, கலவை, வேலூர், சென்னை ஆகிய நகரங்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads