வெள்ளையன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெள்ளையன்கள் என்றும் புல்வெளியாள்கள் என்றும் நுனிச்சிறகன்கள் என்றும் அழைக்கப்படும் பட்டாம்பூச்சிக் குடும்பத்தின் கீழ் 76 பேரினங்களும் 1,100 சிற்றினங்களும் வருகின்றன. இப்பட்டாம்பூச்சிகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆசியக்கண்டத்திலும் வெப்பமண்டலங்களில் காணப்படுகின்றன. சில இனங்கள் மட்டும் வட அமெரிக்காவில் இருக்கின்றன.[1] இவற்றின் மாறுபட்ட நிறத்தைத்தரும் நிறமிகள் கழிவுகளிலிருந்து பெறப்படுகின்றன.[2]
Remove ads
புறத்தோற்றம்
இப்பட்டாம்பூச்சிகள் மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களிலான இறக்கைகளையும், அவற்றின்மீது சிவப்பு, கறுப்பு, ஆரஞ்சு, பழுப்பு நிறத்திட்டுக்களையும் கொண்டிருக்கின்றன. மேலிறக்கைகள் அடியில் அகலமாகவும் நுனியில் குறுகியும் நீண்டும் உள்ளன. பின்னிறக்கைகள் வட்டமாகவோ வளைந்த விளிம்புடனோ காணப்படுகின்றன. பின்னிறக்கைகள் அடிவயிற்றைச்சுற்றி அமைந்திருக்கின்றன. அதனால் அவை இறக்கைகளை மடித்து அமர்ந்திருக்கும்போது அப்பகுதி மறைந்தே இருக்கும். இவற்றின் கால்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. கூட்டுக்கண்கள் வெளிர்மஞ்சளாகவோ வெளிர்நீலமாகவோ சாம்பல்நிறத்திலோ காணப்படும். நெஞ்சு நடுத்தரமாகவும் அடிவயிறு நீண்டும் குறுகியும் பொதுவாக காணப்படும். ஆனால் செஞ்சிறகன், கொன்னை வெள்ளையன் முதலிய சில இனங்களின் நெஞ்சு தடித்தும் அடிவயிறு சிறிதாகவும் இருக்கும். ஆண்பூச்சிகளின் இறக்கைகள் பெண்பூச்சிகளைக்காட்டிலும் பெரிதாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் குறுகலான திட்டுக்களைப்பெற்றிருக்கும். பெண்பூச்சிகள் மங்கலான பல திட்டுக்களைப்பெற்றிருக்கின்றன.
Remove ads
வாழிடங்கள்
அனைத்துவகை இடங்களிலும் வாழ்ந்தாலும் இப்பட்டாம்பூச்சிகள் பொதுவாக வெயிலை நாடுகின்றன.
நடத்தை
சுற்றும் வெள்ளையன், ஆரஞ்சு நுனிச்சிறகன் முதலிய சில இனங்கள் முன்னிறக்கைகளைப் பின்னிறக்கைகளுக்கு நடுவே வைத்தவாறு அமரும். வெயில்காயும்போதும் இறக்கைகளை மடித்தே உட்காரும். பறக்கும்விதம் இனத்துக்கினம் மாறுபடும். மந்தமானதுமுதல் மிகவிரைவானதுவரை இருக்கும். தரையையொட்டி குறுஞ்செடிகளையொட்டியே பெரும்பாலானவை காணப்படும். ஆண்பூச்சிகள் திறந்தவெளிகளை விரும்பும், சேற்றுமண்ணில் உப்புக்களுக்காக உறிஞ்சும். பெண்பூச்சிகள் நிழலை நாடும். பருவகாலத்துக்கேற்றாற்போல ஆண்-பெண் பூச்சிகளில் தோற்றமாற்றங்கள் காணப்படும்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads