வேங்கை (மரம்)

From Wikipedia, the free encyclopedia

வேங்கை (மரம்)
Remove ads

வேங்கை (Pterocarpus marsupium) எனப்படுவது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் வேங்கை, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

இந்த மரம் 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட கொத்தாக இருக்க, இலைநுனி வளைந்திருக்கும். மரத்தின் பால் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பயன்பாடு

வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Thumb
வேங்கை இலைகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்துப் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்[2]). கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.[3]

கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.

Remove ads

சங்க காலம்

ஐங்குறுநூறில் வேங்கை குறிப்பிடப்படுகிறது.[4][5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads