களத்தில் சந்திப்போம்
2021இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
களத்தில் சந்திப்போம் (Kalathil Santhippom) என்பது 2021ஆம் ஆண்டு ஆர். அசோக் எழுதிய உரையாடல்களுடன் என். ராஜசேகர் எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி விளையாட்டு மசாலா திரைப்படமாகும். இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் ,பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இந்தப் படம் கபடி விளையாட்டையும், ஆரம்பத்தில் போட்டியாளர்களாக கருதப்பட்ட அசோக், ஆனந்த் ஆகிய இருவரின் நட்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் நடித்த நடிகர் நாடோடிகள் கோபால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக 5 மார்ச் 2020இல் இறந்து போனார். இது 5 பிப்ரவரி 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2][3]
Remove ads
நடிகர்
- அசோக்காக ஜீவா
- ஆனந்தாக அருள்நிதி
- காவ்யாவாக மஞ்சிமா மோகன்
- சோபியாவாக பிரியா பவானி சங்கர்
- அப்பச்சியாக ராதாரவி
- புலியாக ரோபோ சங்கர்
- பாட்டிலாக பாலா சரவணன்
- அசோக்கின் தந்தியாக இளவரசு
- அசோக்கின் தாயாக சிறீரஞ்சனி
- ஆனந்தின் தந்தையாக நாடோடிகள் கோபால்
- ஆனந்தின் தாயாக ரேணுகா
- காவ்யாவின் தந்தை தென்னரசாக வேல ராமமூர்த்தி
- சோபியாவின் தந்தை ஆடுகளம் நரேன்
- காசியாக ஜி. மாரிமுத்து
- புல்லட் பாண்டியாக சம்பத் ராம்
- சிறப்புத் தோற்றத்தில் பா. விஜய்
- சிறப்புத் தோற்றத்தில் பிரயாகா மார்ட்டின்
Remove ads
கதைச் சுருக்கம்
ஆனந்த் ( அருள்நிதி ), அசோக் ( ஜீவா ) ஆகிய இருவரும் சடுகுடு மைதானத்தில் போட்டியாளர்கள். ஆனால் மைதானத்திற்கு வெளியே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். திரைப்படம் அடிப்படையில் அவர்கள் குடும்பங்கள் மற்றும் தனிப்பட்ட காதல் உறவுகள் தொடர்பாக அவர்கள் ஒன்றாக எதிர்கொள்ளும் தடைகளை ஆராய்கிறது. அதையெல்லாம் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை ஆராயும் படமாகச் செல்கிறது.
படத்தின் இசையையும் பின்னணி இசையையும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய், விவேகா ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். "யார் அந்த ஓவியத்தாய்"என்ற முதல் தனிப்பாடல் 26 அக்டோபர் 2020இல் வெளியிடப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads