வைக்கம் மௌலவி

மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வைக்கம் முகமது அப்துல் காதர் மௌலவி (Vakkom Mohammed Abdul Khader Moulavi) ( பிறப்பு 28 திசம்பர் 1873 - இறப்பு: 31 அக்டோபர் 1932) இவர் வைக்கம் மௌலவி என்று அழைக்கப்பட்ட.[1][2] இவர் ஓர் சலாபி அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியும், ஆசிரியரும், எழுத்தாளரும், முஸ்லீம் அறிஞரும், பத்திரிகையாளரும், சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். மேலும் இந்தியாவின் சுதேச அரசான திருவிதாங்கூரில் (இன்று கேரளா) ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். இவர் செய்தித்தாள் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரராக இருந்து சுவதேசாபிமானி என்ற பத்திரிக்கையில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுதிய காரணமாக 1910இல் திருவிதாங்கூர் திவான் பி. ராஜகோபாலாச்சாரி என்பவரால் தடை செய்யப்பட்டது.[2][3][4][5][6][7]

விரைவான உண்மைகள் வைக்கம் முகமது அப்துல் காதர் மௌலவி, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

1873 திருவனந்தபுரத்தின் வைக்கம் என்ற இடத்தில் மெளலவி பிறந்தார். மதுரை, ஐதராபாத் ஆகிய இடங்களின் வம்சாவளியைச் சேர்ந்த பூந்தரன் என்ற ஒரு பிரபலமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த, இவருடைய தாய்வழி மூதாதையர்கள் மாநில அரசாங்கத்தின் இராணுவத்தில் பணியாற்றினர். இவரது தந்தை, ஒரு முக்கிய வணிகராக இருந்தார். அவர், பல்வேறு இடங்களிலில் பலவகை அறிஞராக பணிபுரிந்தார், பயணம் செய்யும் ஒரு அரேபியர், அவருக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு கற்றுக் கொண்டார். குறுகிய காலத்தில், மௌலவி அரபு, பாரசீக, உருது, தமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளைக் கற்றுக்கொண்டார்.[8]

மௌலவி 1900 இல், அலியார் குஞ்சு பூந்தரன் விலக்கோம் மற்றும் பாத்துமா காயல்புரம் ஆகியோரின் மகளான அலீமா என்பவரை மணந்தார். மௌலவி - அலீமா தம்பதியருக்கு அப்துல் சலாம் என்ற மகன் பிறந்தவுடன் அலீமா அவர்கள் இறந்தார். ஒரு வருடம் கழித்து, மௌலவி ஆமினா அம்மாள் என்பவரை மணந்தார். இத்தம்பதியினருக்கு அப்துல் சலாம், அப்துல் கை, அப்துல் வகாப், இளைய அப்துல் காதர், அப்துல் அக், உபைதுல்லா, ஆமீனா, இயாகியா, சக்கீனா, முகமது ஈசா மற்றும் முகமது இக்பால் என்ற பத்து குழந்தைகள் பிறந்தனர். இவரது மகன்கள் அப்துல் சலாம், அப்துல் வகாப் மற்றும் முகம்மது ஈசா ஆகியோர் இஸ்லாமிய ஆய்வு எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள், மற்றும் இளைய அப்துல் காதர் ஒரு எழுத்தாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் மற்றும் பத்திரிகையாளராகவும் ஆனார். இவரது மருமகன்களில் ஒருவரான, வைக்கம் மசித் ஒரு இந்திய சுதந்திர போராளியாகவும், திருவிதாங்கூர் - கொச்சியின் மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினராகவும், மற்றொரு மருமகனான அபீப் முகமது, திருவிதாங்கூர் உயர் நீதிமன்றத்தின் முதல் முஸ்லிம் நீதிபதியாகவும் இருந்தார். கேரள சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான கே. எம். சீத்தி சாகிப் மற்றும் கேரள முஸ்லீம்களில் சமூக சீர்திருத்தவாதி ஆகியோர் அவருடைய சீடர்களாக இருந்தனர்.

Remove ads

பத்திரிகை மற்றும் சுவதேசாபிமானி

1905 சனவ்ரி 19 அன்று இல் சுவதேசாபிமானி என்ற செய்தித்தாளை மௌலவி தொடங்கினார், 'எந்தவொரு வடிவத்திலும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை கண்டிக்க இந்தப் பத்திரிக்கை தயங்காது' என்று அறிவித்தார். ஆனால் 1910 செப்டம்பர் 26 இல் செய்தித்தாள் மற்றும் அச்சகம் பிரிட்டிசு அரசின் காவல்துறையால் முடக்கப்பட்டன. மேலும் இதன் ஆசிரியர் இராமகிருட்டிண பிள்ளை கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார்]].[9][10][11]

பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், மௌலவி சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் மேலும் கவனம் செலுத்தினார், மேலும் ஒரு சமூகத் தலைவராகவும்,[3]. தௌசாபா மற்றும் இஸ்லாம் மத சித்தாந்த சாம்கிரஹம் ஆகிய அசல் படைப்புகளையும், அதே நேரத்தில் இமாம் கஸாலிவின் கீமியா-ஈ-சாதத், அக்லு சுன்னத்வால் ஜமாத், இஸ்லாமிக் சந்தேசம், சூரத்-உல் ஃபதியா மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதினார்.[5]

Remove ads

சமூக சீர்திருத்தம்

கேரள முஸ்லீம் சமூகத்தில் மிகச் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவராக மௌலவி கருதப்படுகிறார். மேலும் சில சமயங்களில் "முஸ்லிம் மறுமலர்ச்சியின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார்.[12] மதத்தின் சடங்கு அம்சங்களை விட மத மற்றும் சமூக பொருளாதார அம்சங்களை இவர் வலியுறுத்தினார். இவர் நவீன கல்வி, பெண்களின் கல்வி மற்றும் முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் மோசமான பழக்கங்களை நீக்குதல் ஆகியவற்றிற்காக பிரச்சாரம் செய்தார்.[12][13][14][15]

இறுதி நாட்கள்

குர்ஆனின் மலையாள மொழிபெயர்ப்பை இவர் சுருக்கமாக எழுதியுள்ளார். இது மூலத்திலுள்ள அசல் உரையின் அடிப்படை மாறாமல் நேர்த்தியான பாணியில் எழுதப்பட்டதாகும் மலேசிய மொழியில் குர்ஆனின் மொழிபெயர்ப்பைத் தயாரிப்பது என்பது இவரது வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அப்பணி முடிவடைவதற்கு முன்பாக இவர் 1932 ஆகத்து 23, அன்று இறந்தார்.

வைக்கம் மௌலவியின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையம்

வைக்கம் மௌலவி நினைவாக "வக்கோம் மௌலவி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையம்" ஒன்று ஆரம்பிக்கப்பட்டது சுயாதீன மற்றும் தாராளவாத சிந்தனை மற்றும் வைக்கம் மௌலவியால் முன்மொழியப்பட்ட மறுமலர்ச்சி கொள்கைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்த மையம் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads