திருவாங்கூர் கொச்சி

1949 முதல் 1956 வரை இருந்த இருந்த இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia

திருவாங்கூர் கொச்சி
Remove ads

திருவாங்கூர்-கொச்சி (Travancore-Cochin) அல்லது திரு-கொச்சி (மலையாளம்: തിരു-കൊച്ചി, திரு-கொச்சி) என்பது இந்தியவாவில் குறைந்த காலம் (1949–1956) இருந்த ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தின் இயற்பெயர் திருவாங்கூர் மற்றும் கொச்சி ஐக்கிய மாகாணம் (United State of Travancore and Cochin) என்பதாகும் இது 1949 சூலை 1 அன்று, இரண்டு மன்னர் அரசுகளான, திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவற்றை இணைத்து திருவனந்தபுரத்தை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் பெயர் 1950 சனவரியில் இல் திருவாங்கூர்-கொச்சி மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.

விரைவான உண்மைகள் திருவாங்கூர் கொச்சி ஐக்கிய மாகாணம் (1949–1950)திருவாங்கூர்-கொச்சி மாநிலம் (1950–1956)തിരു-കൊച്ചി, தலைநகரம் ...
Remove ads

வரலாறு

திருவாங்கூரின் காங்கிரஸ் பிரதமராக இருந்த பட்டம் டி.கே. நாராயணப் பிள்ளை, திருவாங்கூர்-கொச்சியின் முதலமைச்சராக ஆனார். முதல் தேர்தல் 1951 நடந்தது அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ஏ. ஜே. ஜோன் அன்னபரம்பள்ளி முதலமைச்சராக ஆனார், இவர் 1954 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[1]

திருவாங்கூர் ஆட்சியாளரே திருவாங்கூர்-கொச்சியின் ஆளுநராக (ராஜபிரமுகர் என அழைக்கப்பட்டார்) நியமிக்கப்பட்டார். கொச்சி மகாராஜவுக்கு துணை உபராஜபிரமுகர் பதவி கொடுக்க முன்வந்தபொது, ஆட்சி அதிகாரத்தை தந்தபிறகு எந்த பட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டார். கொச்சி மகாராஜா அரச குடும்பத்தின் மூத்த வலிய தம்புரானை அழைத்து மக்களின் நன்மைக்காக நிபந்தனையின்றி அரச அதிகாரங்களை கைவிட்ட வேண்டும் என்று கூறினார்.[2] 1954 இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ. தாணுபிள்ளை முதலமைச்சராக இருந்தபோது, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மதராஸ் மாநிலத்துடன் அதன் அண்டை பகுதியான தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகளை இணைக்கக்கோரி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டத்தை வன்முறையால் அடக்க உள்ளூர் போலீசார் முயன்று அதனால் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மார்தாண்டம், புதுக்கடை ஆகிய இடங்களில் கொல்லப்பட்டு, திருவாங்கூர்-கொச்சியின் இந்த இணைப்பால் தமிழ் மக்கள் ஈடு செய்ய முடியாத அளவுக்கு அந்நியப்பட்டுப்போயினர்.

1956 ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், திருவாங்கூரின் நான்கு தெற்கு வட்டங்களான, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒரு பகுதி சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 திருவிதாங்கூர்-கொச்சியுடன் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம் புதியதாக கேரள மாநிலத்தை உருவாக்க ஏதுவாக, அதனுடன் இணைக்கப்பட்டது. ராஜபிரமுகருக்கு பதிலாக இந்திய ஜனாதிபதியால் மாநிலத் தலைவராக ஆளுநர் நியமிக்கப்பட்டார்.

Remove ads

முதலமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் முதலமைச்சர், பொறுப்பு ஏற்பு ...
Remove ads

துணைப்பிரிவுகள்

மாநிலம் 4 மாவட்டங்களாகவும் 36 வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.[3] மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் வட்டம் ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads