வைராவிகுளம் ஊராட்சி
இது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைராவிகுளம் ஊராட்சி (Vairavikulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2397 ஆகும். இவர்களில் பெண்கள் 1231 பேரும் ஆண்கள் 1166 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சி 2006-2007ஆம் ஆண்டு மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது முழு சுகாதாரத்திற்காக பெற்றது. அன்றைய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கைகளால் விருதும் ரூபாய் இரண்டாம் லட்சத்திற்கான காசோலையும் பெற்று வந்தது அது சமயம் இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் பாபநாசம் அவர்கள் பதவியில் இருந்தார்கள். இந்த ஊராட்சியின் முதல் ஊராட்சி மன்றத் தலைவராக திரு கணபதி தேவர் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இரண்டாவதாக திரு ஆ.ராமையா தேவர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார் 3 மற்றும் 4வது முறை பா. சுப்பிரமணியன் அவர்களும் 5 வது திரு மாயாண்டி தேவர்1984-89 என்பவரும் 6 வது திருமதி பிரேமா அருணாச்சலம் 1996-2001. 7 வது திருமதி பிச்சம்மாள் சிவசங்கர் நாராயணன்2001-2006 அவர்களும், 8 வது எஸ் பாபநாசம்2006-2011 அவர்களும் 9 எஸ் முத்துக்குமார்2011-2016. என்பவரும் ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார் . 2010ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத்திற்கு புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது ஊராட்சி மன்றத்திற்கான நமக்கு நாமே திட்டத்தில் 2 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது 2007ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வைராவிகுளம் ஊராட்சியில் நூலக கட்டிடம் சாலை மேம்பாடு ஊரணி மறுநிர்மாணம் மின்விளக்கு வசதிகள் விளையாட்டுத் திடல் அமைத்தல் என மொத்தம் ரூபாய் 20 லட்சத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது 2010ஆம் ஆண்டு இந்திரா காலனி பகுதியில் அன்றைய மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு இரா ஆவுடையப்பன் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது 2007ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய நியாயவிலை கட்டிடம் கட்டப்பட்டது டாக்டர் கலைஞர் நகர் பகுதியில் ரூபாய் ஒன்பதரை லட்சம் செலவில் 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் தாமிரபரணி ஆற்றிலிருந்து புதிய குடிநீர் ஏற்றும் பைப்லைன் விஸ்தரிப்பு மற்றும் புதிய மின் மோட்டார் இணைப்பு வழங்கப்பட்டது தாமிரபரணி ஆற்றிலிருந்து 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக உறை கிணறு அமைக்கப்பட்டு வைராவிகுளம் ஊராட்சி முழுவதும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022 மார்ச் 22 (உலக தண்ணீர் தினம் )அன்று வைராவிகுளம் ஊராட்சி பகுதியில் 100 சதவீத குடியிருப்புகளுக்கு அனைத்து குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின்(குக்கிராமம்)பட்டியல்[7]:
- ராஜீவ் நகர்
- எம்.ஜி.ஆர். நகர்
- பசும்பொன் நகர்
- சங்குமுத்து நகர்
- Dr . கலைஞர் நகர்
- காமராஜ் நகர்
- வைராவிகுளம்
- இந்திரா காலனி
- அண்ணா நகர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads