ஷமீல் பசாயெவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஷமீல் சல்மானொவிச் பசாயெவ் (Shamil Salmanovich Basayev, உருசியம்: Шамиль Салманович Басаев; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் செச்சினிய இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக உருசியப் படைகளுக்கு எதிராகக் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். செச்சினியாவில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.[2] 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற இயக்கப் பெயரை வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.
செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கெரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.[3][4] 2002 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.[5] 2004 செப்டம்பரில் பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
பசாயெவ் 2006 சூலை 10ம் நாள் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் தற்செயலான குண்டுவெடிப்பில் இறந்ததாக செச்சினியப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads