ஸ்கர்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்கர்டு (Skardu) (Urdu: سکردو, வார்ப்புரு:Lang-bft), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதிக்கு மேல் உள்ள ஜில்ஜிட் - பால்டிஸ்தானின் ஸ்கர்டு மாவட்டம் மற்றும் பல்திஸ்தான் கோட்டத்தின் [1] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.


அமைவிடம்
இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில், 10 கி.மீ. அகலமும்; 40 கி.மீ. நீளமும் கொண்ட உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில் ஸ்கர்டு நகரம் அமைந்துள்ளது.
வரலாறு
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ஸ்கர்டு மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். ஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற காஷ்மீர் ஆக்கிரமிப்பு போரில், பாகிஸ்தான் நாடு, ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் இணைத்துக் கொண்ட பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [2]
தட்பவெப்பம்
ஸ்கர்டு நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 27 °C (81 °F), குறைந்த வெப்பம் 8 °C (46 °F) கொண்டிருக்கும். குளிர்காலத்தில் −10 °C (14 °F) முதல் −24.1 °C (−11 °F) வரை வெப்பம் கொண்டிருக்கும்.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads