ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா

From Wikipedia, the free encyclopedia

ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
Remove ads

எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (Stanley Jeyaraja Tambiah; 16 சனவரி 1929[2] - 19 சனவரி 2014[3])என்பவர் சமூக மானிடவியலாளரும்[4] ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[5] இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் (Association for Asian Studies) முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டிற்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையாStanley Jeyaraja Tambiah, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்டான்லி தம்பையா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் சார்ல்சு ராசக்கோன், எலீசா செலானா தம்பையா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.[3] கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951 இல் இளங்கலைப் பட்டம் பெற்று நியூ யோர்க் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 1954 இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்[4].

படிப்பை முடித்துக் கொண்டு 1955 இல் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் விரிவுரையாளராக 1960 வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் யுனெஸ்கோவின் அனுசரனையில் தாய்லாந்து, பாங்கொக்கில் இயங்கும் Bangkok Institute for Child Studies என்ற ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 1963 முதல் 1972 வரை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், 1973 முதல் 1976 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்[2]. 1976 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்[5].

Remove ads

விருதுகள்

Remove ads

இவரது நூல்கள்

மறைவு

பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா நீண்ட சுகவீனத்தை அடுத்து 2014 சனவரி 19 இல் ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ், கேம்பிரிட்ச் நகரில் காலமானார். இவருக்கு மனைவி மேரி. எச். தம்பையா, மற்றும் ஜொனத்தன், மேத்தியூ ஆகிய இரு மகன்மார் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads