சிக்காகோ பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

சிக்காகோ பல்கலைக்கழகம்map
Remove ads

சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்குப் படித்தவர்கள் ஆவார்.[9] மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர்.[10]

Remove ads

வரலாறு

Thumb
தொடக்க கால ஆண்டு விழா

நிறுவல்

இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இருபாலரும் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.[11] அமெரிக்க பாப்டிச தேவாலயத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஜான் டி. ராக்பெல்லர் இதற்குப் பண உதவி வழங்கினார். முதன்முறையாக, 1890-ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ப்பர் இதன் தலைவரானார். முதல் வகுப்புகள் 1892-ஆம் ஆண்டு நடந்தன. .[12] தனி நிறுவனமாகத் தொடங்கினர். இதே பெயரில் முன்னர் செயல்பட்ட பல்கலைக்கழகம், நிதி நெருக்கடியால் 1886-இல் மூடப் பட்டதால், இது தொடங்கப்பட்டது, பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி 1898-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது,[13]. பல்கலைக்கழக சட்டப் பள்ளி 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. [14] பின்னர், ஆசிய ஆய்வியல் நிறுவனம் தொடங்கப்பட்டு தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன,[15]

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் இலவசமாகவே இங்குப் படிக்க அனுமதிக்கப்பட்டனர். இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நூல்களையும், ஆய்வுக் கருவிகளையும் வழங்கியது,

1920–1980

1929-ஆம் ஆண்டு, பல்கலையின் ஐந்தாவது தலைவரான ராபர்ட் மேனார்டு ஹட்சின்ஸ், கல்விக்கு முக்கியத்துவம் தர எண்ணிப் பல்கலைக்கழக கால்பந்து குழுவை நீக்கினார்.[16] வடமேற்குப் பல்கலைக்கழகத்தையும், சிக்காகோ பல்கலைக்கழகத்தையும் இணைக்கத் திட்டமிட்டார்.[17] இவரது காலத்தில், பல்கலைக்கழக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. மருத்துவத் துறை மாணவர்கள் சேரத் தொடங்கினர்.[18]

Thumb
அணுக்கருத் தாக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள். என்ரிக்கோ பெர்மி முதல் வரிசையில்

ராக்ஃபெல்லர் அறக்கட்டளை வழங்கிய பணத்தால், பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது கல்லூரி நிர்வாகம்.[16] இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தால் மன்காட்டன் திட்டம் செயற்படுத்தப்பட்டது.[19] புளூட்டோனியத்தை முதன்முறையாக இங்குதான் பிரித்தனர். செயற்கையான, அணுப்பிளவை என்ரிக்கோ பெர்மி கண்டுபிடித்தார்.[19][20]

1978-ஆம் ஆண்டில், ஹன்னா ஹோல்போர்ன் கிரே, யேல் பல்கலைக்கழகத்தின் தலைவராய் இருந்தவர், பின்னர் இங்குத் தலைவராக ஏற்கப்பட்டார். பெண்ணான இவர், 15 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார்..[21]

1990–2010

1999 ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான ஹூகோ சோன்னென்ஷென், மாணவர்களின் சுமையைக் குறைக்க எண்ணிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை 21-இல் இருந்து 15-ஆக குறைக்கப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ், தி எக்கனாமிஸ்ட் உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகைகள் இதைச் செய்தியாக வெளியிட்டன. பிரச்சனை எழவே, 2000-இல் தன் பதவியில் இருந்து விலகினார்.[22]. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கியது. 2009-ஆம் ஆண்டில், மேக்ஸ் பலேவ்சுகி வசிப்பிடக் கட்டடம் உருவாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், 10 மாடிக்கட்டடமாக உயிர்மருத்துவத் துறை மையம் கட்டப்பட்டது.[23]

Remove ads

வளாகம்

முதன்மை வளாகம் 211 ஏக்கர்கள் (85.4 ha) பரப்பளவில் சிக்காகோ நகரில் உள்ளது. 1893-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி, பல்கலையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது. தொடக்ககால கட்டடங்கள் ஆறு உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன, இங்குள்ள ஹட்சிசன் அறை, ஆஃக்சுபோர்டு நகர தேவாலயத்தை ஒத்திருக்கும். சிக்காகோ பைல்-1 அமைந்துள்ள இடம், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.[24] பிராங்க் லாய்டு ரைட் கட்டிய ராபி ஹவுஸ் கட்டடமும் தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளென் சீபோர்க், தன் 405 அறையில், புளோட்டினியத்தை இங்குதான் பிரித்தார்.[25]

தொலைதூர வளாகங்கள்

இந்தப் பல்கலைக்கழகம் தொலைதூரங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது. இதன் வணிகப் பள்ளிக்குச் சிங்கப்பூரிலும், லண்டனிலும் கிளைகள் உள்ளன. பாரிசு நகரில் ஒரு வளாகம், செய்ன் ஆறு அருகில் உள்ளது. பெய்ஜிங் நகரிலும் இதன் வளாகம் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது,

Remove ads

நிர்வாகம்

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு உள்ளது. பல்கலைக்கழகத் தலைவர் உட்பட ஐம்பது பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். பல்கலைக்குத் தேவையான நிதியைச் சேகரிப்பதும், திட்டங்களை வகுப்பதும், இதன் பொறுப்பு.[26]

நூலகம்

இங்கு ஆறு நூலகங்கள் உள்ளன. மொத்தம் 8.5  மில்லியன் நூல்கள் உள்ளன. அமெரிக்காவின் முன்னணி நூலகங்களில் இதுவும் ஒன்று. தத்துவம், வரலாறு, வணிகம், மருத்துவம் எனப் பல துறைச் சார்ந்த நூல்களும் இவற்றுள் அடங்கும்.

பழைய மாணவர்கள்

2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பல்கலைக்கழகத்திற்கு 133,155 பழைய மாணவர்கள் உள்ளனர்..[27] இவர்களில் பராக் ஒபாமா குறிப்பிடத்தக்கவர். மேலும், இங்குப் படித்தவர்கள். உலக வங்கி, கனடிய அரசு, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் பணிபுரிகின்றனர்.

நேட் சில்வர், கர்ட் வானெகெட், கார்ல் சேகன், மில்ட்டன் ஃப்ரீட்மன், யூஜின் ஃபாமா, எட்வின் ஹபிள், லாரி எலிசன் ஆகியோரும் இங்குக் கற்றனர்.

தடகளம்

இங்குப் பத்து ஆண் குழுக்களும், ஒன்பது மகளிர் குழுக்களும் இயங்குகின்றன.[28]. சிக்காகோ மரூன்ஸ் என்பது இந்த விளையாட்டுக் குழுக்களின் ஒட்டுமொத்த பெயர். என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய தடகளப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பர்.

மாணவர் வாழ்க்கை

இங்குள்ள மாணவர்கள் ஏறத்தாழ 400 அமைப்புகளை நடத்துகின்றனர். இவற்றில் சமயம், பண்பாடு, விளையாட்டு, ஆர்வக் குழுக்கள் ஆகியன அடங்கும். மாணவர்களே பதிப்பிக்கும் செய்தித்தாள், திரைப்படக் குழு, பல்கலைக்கழக வானொலி உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன.

பிற

இங்குத் தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[29]

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads