ஸ்ரீஹரிக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீஹரிக்கோட்டை (தெலுங்கு: శ్రీహరికోట) வங்காள விரிகுடா கரையோரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அரண் தீவு ஆகும். சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இங்கு இந்தியாவின் விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன் விண்கலங்களை இங்கிருந்து ஏவுகிறது. 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான்-1 இங்கிருந்து ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிக்கோட்டை , பழவேற்காடு ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads