ஹாக்கி இந்தியா

From Wikipedia, the free encyclopedia

ஹாக்கி இந்தியா
Remove ads

ஆக்கி இந்தியா என்பது, இந்தியாவில் வளைத்தடிப் பந்தாட்ட விளையாட்டின் இரண்டு ஆளுமைக் குழுக்களில் ஒன்றாகும். மற்றொரு ஆளுமைக்குழு இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு ஆகும். இந்திய வளைதடிப்பந்தாட்டப் பேரவையின் செயலாளர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்திய வளைதடிப் பந்தாட்டக் கூட்டமைப்பை இடைநிறுத்தம் செய்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆதரவில் ஆக்கி இந்தியா என்ற ஆளுமைக்குழுவை உருவாக்கியது.[1] 1928 முதல் 2008 வரை 80 வருடங்களுக்கு ஆளுமைக் குழுவாக இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு இருந்தது. இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்புக்கும் புதிதாகத் தொடங்கப்பட்ட ஆக்கி இந்தியாவிற்கும் இடையேயான உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கையில், ஆக்கி இந்தியா அங்கீகரிக்கபட்ட ஆளுமைக்குழுவாக இருந்து வருகிறது.

Thumb
ஆக்கி இந்தியாவின் சின்னம்
Remove ads

துவக்கம்

இந்திய வளைதடிப் பந்தாட்ட பேரவையின் செயலாளர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு, இந்திய வளைதடிப் பந்தாட்டப் பேரவையை 28 ஏப்ரல் 2008 அன்று ரத்து செய்தது. அதன்பின் 10 மே 2009 அன்று இந்திய வளைதடிப் பந்தாட்ட பேரவை முழுமையாக ரத்து செய்யப் பட்டு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆதரவில் ஆக்கி இந்தியா என்ற ஆளுமைக்குழுவை உருவாக்கியது.

அங்கீகாரம் தொடர்பான வழக்கு

1928 முதல் 2008 வரை 80 ஆண்டு காலம் வளைதடிப் பந்தாட்டத்திற்கு ஆளுமைக்குழுவாக இருந்த இந்திய வளைதடிப்பந்தாட்ட பேரவை, முறையின்றி ரத்து செய்யப்பட்டு விட்டதாக கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஆராய்ந்த தில்லி உயர் நீதிமன்றம், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பும், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இரண்டும், நடந்த லஞ்ச ஊழலை பற்றி ஆராயாமல் தடாலடியாக இந்திய வளைதடிப்பந்தாட்ட பேரவையை ரத்து செய்துவிட்டதேன்று கூறி இந்திய வளைதடிப்பந்தாட்ட பேரவையின் ஆளுமை அங்கீகாரத்தை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கியது.[1] அதே தீர்ப்பில், தில்லி உயர் நீதிமன்றம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தந்த ஆக்கி இந்தியாவுக்கான ஆளுமை அங்கீகாரத்தைப் பற்றி எதுவும் சொல்லாததால் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், ஆக்கி இந்தியா, இந்திய வளைதடிப்பந்தாட்ட பேரவை இரண்டையும் தேசிய விளையாட்டு பேரவைகளாக ஏற்றது.[2]

Remove ads

அங்கீகாரம்

ஆயினும், சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் பேரவை இந்திய வளைதடிப் பந்தாட்ட பேரவையின் அங்கீகாரத்தை நிராகரித்து, ஆக்கி இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆக்கி இந்தியா, வளைதடிப் பந்தாட்ட பெண்கள் உலகக் கோப்பை[3], மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு[4][5] உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணங்க இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணிகளைத் தேர்வு செய்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads