ஹிஞ்சவடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹிஞ்ஜவடி அல்லது ஹிஞ்ஜேவடி (மராத்தி: हिंजवडी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனே மாவட்டம், முல்சி தாலுகாவில் அமைந்த சிற்றூர் ஆகும். இது புனே நகரத்தின் புறவழிச்சாலைக்கு அருகேவுள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். பெரும்பாலும் இப்பகுதி மக்களால் தவறுதலாக ஹிஞ்ஜேவாடி என உச்சரிக்கப்படுகிறது. இங்கு ராஜீவ் காந்தி தொழிற்நுட்ப பூங்கா இருப்பதால் இருபதிற்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன[1]. ஹிஞ்ஜவடியில் மொத்தம் மூன்று கட்டங்களாக(Phase) திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது இந்தப்பூங்கா.
ஐகேட், ஐபிஎம் இந்தியா, ஏடூஎஸ், சினெக்ரான், மஹிந்திரா இஞ்சினியரிங், ஐடியா செல்லுலார், கே.பி.ஐடி கம்மின்ஸ், டாடா டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, கிரெடிட் சுவிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஜியோமெட்ரிக் லிமிடெட், டெக் மஹிந்த்ரா, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் (கட்டப்பட்டு வருகிறது), ஹனிவெல், மைண்ட்ட்ரீ போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எம்க்யூர், எக்ளர்க்ஸ், கம்பூலிங்க் மற்றும் சிஸ்கோ போன்ற இதர நிறுவனங்ககளும் உள்ளன.
ஹின்ஜேவாடி தொழில்நுட்பப் பூங்காவில் பகுதி 1 மற்றும் 2 கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பகுதி 3 கட்டப்பட்டு வருக்றது. எதிர்காலத்தில் அங்கு நான்காவது பகுதி உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்காவிற்கு அருகில் வீட்டுமனை விற்பனை அதிகரித்துள்ளது. ஹிஞ்ஜவடி மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் மனை விலை[2] அதிகமாகவுள்ளது. ஹின்ஜேவாடி கட்டம் ஒன்றில் காவல் நிலையமுள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads