1-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிபி 1ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கிபி 1 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.
இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோமப் பேரரசின் அதிகரித்த கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ரோமப் பேரரசின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. இதில் முக்கியமாக 43ம் ஆண்டில் குளோடியஸ் மன்னனின் கீழ் பிரித்தானியா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகுஸ்டஸ் அவனது நீண்ட கால அரசாட்சியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினான். இந்நூற்றாண்டின் கடைசியில் 68 இல் நீரோ மன்னனின் இறப்பிற்குப் பின்னர் "ஜூலியோ-குளோடிய வம்சம்" முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சிறிது கால உள்நாட்டுப் போரின் பின்னர் வெஸ்பாசியான் மன்னன் மீண்டும் நாட்டில் திர்ரத் தன்மையை ஏற்படுத்தினான்.
சீனா ஹான் வம்சத்தினால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் (8-23) சின் வம்சம் நாட்டை ஆண்டது. 23 இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர்.
Remove ads
கிறிஸ்தவம்
புதிய ஏற்பாட்டின் படி, டிபேரியசின் ஆட்சியில் இயேசு கிறிஸ்து புதிய கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தார்.[1][2][3][4][5][6][7] அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இவரின் சீடர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் இயேசுவின் செய்திகளை எடுத்துச் சென்று ரோம் நகரிலும் அறிமுகப்படுத்தினர். இவர்கள் ரோம மன்னரால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்டனர் (64). இது பல நூற்றண்டுகளுக்கு இறுதியில் முதலாம் கொன்ஸ்டண்டீன் மன்னனால் அதிகாரபூர்வ சமயமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தது.
Remove ads
நிகழ்வுகள்
- 1: மேற்கு ஐரோப்பாவில் சிங்கங்கள் அருகின.
- சீன வானியல் நிபுணர் லியூ சின் (இ. 23) 1080 வெவ்வேறு விண்மீன்களின் விபரங்களை அறிவித்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads