1951 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1951 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1951 Census of India) இது இந்தியாவின் 9வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1871-ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.[1] மேலும் இது இந்தியப் பிரிவினைக்கு பிறகு முதன்முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும்.[2] மேலும் இக்கணக்கெடுப்பு, 1948-இல் இயற்றப்பட்ட இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் மேற்கொண்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.
1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 36,10,88,090 (முப்பத்தி ஆறு கோடியே பத்து இலட்சத்து எண்பத்தி எட்டாயிரத்து தொன்னூறு) ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் இருந்தனர்.[3] 1941 - 1951 முடிய பத்தாண்டுகளில் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி 4,24,27,510 (13.31%) ஆக உயர்ந்துள்ளது. 1941-ஆம் ஆண்டின் மக்கள்தொகை 31,86,60,580 ஆகும். 1951-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை குறைந்தற்கு முக்கிய காரணம் இந்தியப் பிரிவினை ஆகும்.[4] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1951-ஆம் ஆண்டில் மட்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.[5] 1951-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதே தேசிய குடிமக்கள் பதிவேடும் பராமரிக்கப்பட்டது.[6][7] 1951 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18% இந்தியர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள் என இருந்தது.[8]
1951-ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம், 72,26,000 (எழுபத்தி இரண்டு இலட்சத்தி இருபத்தி ஆறாயிரம்) இசுலாமியர்கள் இந்தியாவிலிருந்து, தற்கால பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு குடியேறியுள்ளனர். மேலும் தற்கால பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் பகுதிகளில் வாழ்ந்த 72,49,000 இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள, சமணர்கள் இந்தியாவில் குடியேறினர் என அறியப்பட்டது.[9]
Remove ads
மொழிகள் & மக்கள்தொகை பரம்பல்
Remove ads
சமயவாரி மக்கள்தொகை
1951 இந்திய மக்கள்தொகையில் இந்துக்கள் 306 மில்லியன் (84.1%) மக்கள் இருந்தனர்.[11] இசுலாமியர்கள் 34 மில்லியன் (9.8%) மக்கள் இருந்தனர்.[12][13][14][15][16][17][18] கிறித்தவர்கள் 8.3 மில்லியன் மக்கள் இருந்தனர்[13]
1947 இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 73% ஆக இருந்தனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads