இந்தியாவின் மக்கள் தொகையியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 17.5 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 50 சதவிகிதம் 25 வயதிற்கும் , 65% சதவிகிதம் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர் .[2] 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி , 72.2 சதவிகிதம் மக்கள் 6,38,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள 27.8 சதவிகித மக்கள் 5100-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர்.[3][4]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 13.4 விழுக்காடு இசுலாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமணர்கள், மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.
Remove ads
ஒப்பீட்டளவிலான புள்ளிவிவரங்களின்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
Remove ads
இந்தியாவின் மக்கள்தொகை
மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள் (1,210,193,422) உள்ளனர்.[13] அதில் ஆண்கள் 62 கோடியாகவும், பெண்கள் 58 கோடியாகவும் உள்ளனர். மொத்த மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 17.70 ஆக உயர்ந்துள்ளது.[14] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,210,193,422 . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக இந்திய நாட்டின் மக்கள்தொகை உள்ளது.
- ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.
- பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.
படிப்பறிவு
- படித்தவர்கள் எண்ணிக்கை 74 விழுக்காடு.
- படிக்காதவர்கள் 26 விழுக்காடு.
- 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 விழுக்காடு.
- 2011ம் ஆண்டில் 74.04 விழுக்காடு.
- 10 ஆண்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 விழுக்காடு அதிகரித்துஉள்ளது
பெண்கள்
- 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 விழுக்காடு.
- 2011ம் ஆண்டு 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஆண்கள்
- 2001ம் ஆண்டு ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காடு.
- 2011ம் ஆண்டு, 82.14 விழுக்காடு.
10 ஆண்டில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
அதிகம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்
- கேரளாவில் 93.91 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
குறைவாக எழுத, படிக்க தெரிந்தவர்கள்
- பீகார். இங்கு 63.82 விழுக்காடு குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்
Remove ads
மக்கள்தொகை அடர்த்தி
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.
- மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.
- உ.பி.மகாராட்டிர மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
- அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக வடகிழக்கு தில்லி மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டரில் 36 ஆயிரத்து 155 பேர் வசிக்கின்றனர்.[15]
- மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சலப் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.
- உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராட்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.
Remove ads
சமயவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு முடிவுகள்
2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.02 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%),சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[17]
சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு
1951ல் 84.1%ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.
இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள்
மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர்.[18] இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை.இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
Remove ads
தமிழ்நாடு மக்கள்தொகை
- தமிழகத்தின் பரப்பளவு 50,216 சதுர மைல் (1,30,060 சகிமீ) ஆகும்.
- தமிழக மக்கள்தொகை (2001 - 2011) கடந்த 10 ஆண்டுகளில் 15.61% ஆக உயர்ந்துள்ளது.[19]
- தமிழகத்தில் மக்கள்தொகை (72,147,030) 7 கோடி 21 லட்சத்து 47 ஆயிரத்து முப்பது ஆகும்.
- ஆண்கள் 36,137,975
- பெண்கள் 36,009,055
- ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,423,832 அகவுள்ளனர்.
- 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.
- எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
- 52 சதவீதம் பேர் கிராமங்களிலும்,
- 48 சதவீதம் பேர் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், போன்ற நகர் பகுதியிலும் வசிக்கின்றனர்.
Remove ads
2023இல் சீனாவை விஞ்சிய இந்தியாவின் மக்கள் தொகை
2023இல் உலக மக்கள் தொகையான 8.045 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சீன-இந்தியாவின் மக்கள் தொகை உள்ளது. 2023ல் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 1.4286 பில்லினாகவும் (142.86 கோடி), சீனாவின் மக்கள் தொகை 1.4257 பில்லியனாகவும் (142.57 கோடி) இருக்கும் என கூறியுள்ளது.[20] [21][22] முன்னதாக 2022ஆம் ஆண்டில், சீனா 1,426 மில்லியனுடன் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது. ஆனால் இந்தியா 1,412 மில்லியன் மக்கள் தொகை கொண்டிருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads