2012 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
14வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசின் பதின்மூன்றாம் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 சூலை 19, 2012இல் நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் சூலை 2012ல் முடிவடைய இருந்ததை அடுத்து அத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.
Remove ads
குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. குடியரசுத் தலைவருக்கான மொத்தவாக்குகள் இந்திய வாக்காளர் குழுவின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இத்தேர்தலுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெறுவர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டவர்கள்
கருத்துக்கள்/நிகழ்வுகள்
- மே 5 - குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை [5] என்றும் அதுகுறித்து யாரும் தங்களிம் பேசவில்லை என்றும் தில்லி செல்லும் போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா தெரிவித்தார் [6]. பி. ஏ. சங்மா மே 15 அன்று செயலலிதாவை சந்தித்து தமக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரியதை ஏற்று அவரை ஆதரித்து மே 18ல் அறிக்கை வெளியிட்டார்.[7].
- குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிஏ சங்கமா கருத்து தெரிவித்தார் [8].
- பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தினால் திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.[2].
வெற்றி பெற்றவர்
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியக் குடியரசின் 13வது குடியரசுத் தலைவர் ஆனார்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads