2007 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

13வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

2007 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
Remove ads

இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002 ல் நடைபெற்றது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

பின்புலம்

சூலை 19, 2007ல் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 2002-07ல் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளாரக்க ஆளும் இந்திய தேசிய காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி துணைக் குடியரசுத் தலைவரான பைரோன் சிங் செகாவத்தை தனது வேட்பாளராக அறிவித்தது. அவருக்கு போட்டியாக காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிரதீபா பாட்டிலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது. சிபிஐ, சிபிஎம் முதலான இடதுசாரிக் கட்சிகளும் பாட்டிலுக்கு ஆதரவளித்தன. அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி போன்ற மாநில கட்சிகள் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியை அமைத்து அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க முயன்றன. ஆனால் அவர் பிற கட்சிகளின் ஆதரவின்றி போட்டியிட மறுத்துவிட்டார். வாக்கெடுப்பில் பிரதீபா பாட்டில் எளிதில் வென்று குடியரசுத் தலைவரானார்.

Remove ads

முடிவுகள்

ஆதாரம்: "India gets first woman president". NDTV.com. 2007-07-21 இம் மூலத்தில் இருந்து 2007-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070817142617/http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070019764. பார்த்த நாள்: 2007-07-21.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ...
Remove ads

கட்சி வாரியாக வாக்குகள்

மேலதிகத் தகவல்கள் கட்சியின் பெயர், வாக்குகளின் மொத்த மதிப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads