2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. பல்வேறு துறைகளில் இவ்வரசின் நிர்வாக செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.
வெளியுறவுக் கொள்கை
இராணுவம்
- ஐஎன்எஸ் கொச்சி எனும் போர்க் கப்பல் 30 செப்டம்பர் 2015 அன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.[1]
பொருளாதாரம்
சட்டம் ஒழுங்கு
உத்திரப் பிரதேசம்
- மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்தார்[2].
தொடர்வண்டிப் போக்குவரத்து
அமைச்சர்கள்
- டி. வி. சதானந்த கௌடா - ஒன்றிய ஆய அமைச்சர்
- மனோஜ் சின்கா - நடுவண் இணை அமைச்சர்
கட்டண உயர்வு (சூன் 20, 2014)
தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்டம் (2014 - 2015)
சூலை 8 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[7]. இது அமைச்சர் சதானந்த கௌடாவின் முதலாவது தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாகும்[8]. முக்கிய அம்சங்கள்[9]:
- மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் தொடர்வண்டி திட்டம்.
Remove ads
நீர்வள மேலாண்மை
நீர்வள அமைச்சகம் என அழைக்கப்பட்டுவந்த அமைச்சகம், நீர்வளம், ஆறுகள் வளராக்கம் மற்றும் கங்கை புத்துயிர்ப்பு அமைச்சகம் எனும் புதிய பெயரினைப் பெற்றது[10]. ஆற்றுநீர் வளத்தைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பார்வைக் குழுவினை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சூன் 18, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[11].
Remove ads
நாடாளுமன்ற செயற்பாடுகள்
முதல் கூட்டத் தொடர்
- முதல் கூட்டத் தொடர் சூன் 4 முதல் சூன் 11 வரை நடந்தது[12][13]. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரு அவைகளின் கூட்டமர்வில் சூன் 9 அன்று உரையாற்றினார்.[14] குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.[15][16][17]
வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் (2014)
சூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. சூலை 10 அன்று வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது[18]. சூலை 7 அன்று விலைவாசி உயர்வு, தொடர்வண்டி கட்டணம் உயர்வு போன்றவை தொடர்பாக மக்களவையில் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.[19]. சூலை 8 அன்று தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சூலை 9 அன்று 2013-14ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[20][21]. சூலை 10 அன்று 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads